“என்னுடைய வருங்கால மனைவி”… விஜய்க்கு வெட்கத்தில் வார்த்தையே வரல – வைரல் வீடியோ!

Author:
9 August 2024, 12:39 pm

தமிழ் சினிமாவில் பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து இன்று முன்னணி நட்சத்திர நடிகர் என்ற நம்பர் ஒன் இடத்தை பிடித்திருப்பவர் தான் நடிகர் விஜய். இவர் முதன் முதலில் விஜயகாந்த் நடிப்பில் 1984 இல் வெளிவந்த வெற்றி என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து திரையுலகத்திற்கு அறிமுகமானார்.

அதை அடுத்து தனது தந்தை இயக்கத்தில் வெளிவந்த பல்வேறு திரைப்படங்களில் தொடர்ச்சியாக நடித்து வந்த நடிகர் விஜய் நாளைய தீர்ப்பு திரைப்படத்தில் ஹீரோவாகவும் அறிமுகமானார். தொடர்ச்சியாக பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து இன்று நட்சத்திர நடிகர் என்ற அந்தஸ்தில் இருக்கிறார். இவர் தன்னுடைய தீவிர ரசிகையான இலங்கையை சேர்ந்த தமிழ் பெண்ணான சங்கீதாவை 1999 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில் தற்போது சொல்ல வரும் தகவல் என்னவென்றால் நடிகர் விஜய் பல வருடங்களுக்கு முன்னர். பத்திரிக்கையாளர் பேட்டியின் போது தனது வருங்கால மனைவியை குறித்து பேசிய வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அப்போது… உங்களுடைய வருங்கால மனைவி சங்கீதாவை பற்றி கூறுங்கள்? என்று சொன்னதும் விஜய் வெட்கத்துடன்…. என்னுடைய வருங்கால மனைவி சங்கீதா பற்றி சொல்லனும்னா….. என்று கூறி அதற்கு மேல் வார்த்தையே பேச முடியாமல் வெட்கத்தில் சிரிக்கிறார்.

உடனே அங்கிருந்த ரசிகர்கள் எல்லோரும் ஏதாவது சொல்லுங்க என்று சொன்னதும். ரொம்பவே கூச்சப்பட்டு சிரித்துக்கொண்டே பேச ஆரம்பிக்க அங்கிருந்த ஒருவர் அப்பா இருக்கிறார் என்று பயப்படுறார் என்று நினைக்கிறேன் எனக்கூற…. விஜய் நான் ஏங்க அப்பாவை பார்த்த பயப்படணும்? எங்க அப்பா அம்மா பார்த்து வச்ச பொண்ணு தானே அவங்க என கூறி சிரித்தார்.

பின்னர் பேசிய விஜய்…..சங்கீதா தமிழ் பொண்ணு லண்டன்ல செட்டில் ஆகி இருக்காங்க .அவங்க இப்போ மெடிக்கல் சைன்ஸ் பைனல் இயர் படிக்கிறாங்க. அவ்வளவுதான் என்று வெட்கத்துடன் சிரித்து முடித்தார். தன்னுடைய வருங்கால மனைவியை பற்றி விஜய் கூறும் போது.வெட்க சிரிப்புடன் அதிக மகிழ்ச்சியுடன் தளபதியின் இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் இதை வைரல் ஆக்கி வருகிறார்கள். இதோ அந்த வீடியோ:

  • lokesh kanagaraj decided to take break from social media லோகேஷ் கனகராஜ் எடுத்த திடீர் முடிவு! என்ன சார் கடைசில இப்படி பண்ணிட்டீங்களே?