விஜய்யை எச்சரித்த மனைவி… இரவில் நடந்த கடுமையான சண்டை: விவாகரத்து செய்வது உண்மையா?..

Author: Vignesh
22 March 2023, 11:57 am

தமிழ் சினிமாவில் கொடிக்கட்டி பறக்கும் நடிகர் தளபதி விஜய். இவர் ஒரு படத்தில் நடித்தால் அந்த படத்திற்கு இருக்கும் எதிர்ப்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருக்கும். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக லியோ படப்பிடிப்பில் விஜய் செம பிஸியாக இருந்து வருகிறார்.

Vijay SAngeetha - Updatenews360

தற்போது கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்படும் கிசுகிசு விஜய்-கீர்த்தி சுரேஷ் தான். இவை அனைத்தும் கிசுகிசு மட்டுமே என்று சொன்னாலும் சிலர் வேண்டுமென்றே இதை பற்றி பேசி பூதாகரமாக்கி வருகின்றனர்.

இதனிடையே, பிரபல திரைப்பட விமர்சகரும், சென்சார் நிபுணருமான உமர் சந்து விஜய் குறித்து ஷாக்கிங் ட்விட் ஒன்றை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்து இருப்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

vijay sangeetha - updatenews360

தென்னிந்திய நடிகர்களை நடிகைகளுடன் தொடர்பு படுத்தி பாலிவுட் விமர்சகர் உமர் சந்து பல்வேறு கருத்துக்களை தனது ட்வீட்டில் கூறி வருகிறார். விஜய், தனுஷ், சூர்யா போன்ற முன்னணி நடிகர்களின் ரகசியங்களை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.

இந்நிலையில் விமர்சகர் உமர் சந்து சமீபத்தில் விஜய் பற்றிய அதிர்ச்சியூட்டும் தகவல் ஒன்றை பதிவிட்டு உள்ளார்.

Vijay - Updatenews360

தற்போது, விஜய்யும் அவருடைய மனைவியும் கடந்த 19ம் தேதி கடுமையாக சண்டையிட்டதாகவும், இந்த சண்டையின் முடிவில் சங்கீதா, விஜய்யை கடுமையாக எச்சரித்ததாக தெரிவித்துள்ளார். இது விஜய் ரசிகர்களிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது. தற்போது இவரின் இந்த ட்வீட் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 672

    2

    2