நாகர்ஜுனா குடும்பத்தில் இணையும் விஜய் பட நடிகை…இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே..!
Author: Selvan16 November 2024, 7:35 pm
நாகார்ஜூனா வீட்டு கல்யாணம்
பிரபல தெலுங்கு நடிகர் நாகர்ஜுனா வீட்டில் இரண்டாவதாக நடிகை ஒருவர் மருமகளாக வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.தென்னிந்திய சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் மீனாட்சி சவுத்ரி.
இவர் நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்த தி கோட் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து தமிழ் ரசிகர்களை கவர்ந்தார். தற்போது நடிகை மீனாட்சி சவுத்ரி தெலுங்கு நடிகர் சுஷாந்த் என்பவரை காதலித்து வந்ததாகவும் இருவீட்டார் சம்மதத்துடன் விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படியுங்க: அடுத்த மாதமே ரிலீஸ் ஆகும் சூப்பர்ஸ்டார் ரஜினி படம்..உற்சாகத்தில் ரசிகர்கள்..!
ஏற்கனவே நாகார்ஜூனா மகனான நாகார்ஜூனா சைதன்யா சமந்தாவை காதலித்து திருமணம் பண்ணினார் பின்பு அவர்களுக்கு விவாகரத்து ஆகவே சைதன்யா நடிகை சோபிதா துலிபாலாவை இரண்டாவது திருமணம் செய்ய இருக்கிறார்.தற்போது நாகர்ஜூனாவின் தங்கை மகனான நடிகர் சுஷாந்தை தான் நடிகை மீனாட்சி சவுத்ரி கரம் பிடிக்க இருக்கிறார் என்ற தகவல் பரவி வருகிறது.
சமீபத்தில் நடிகை மீனாட்சி சவுத்ரி துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான லக்கி பாஸ்கர் திரைப்படத்தில் அவருக்கு மனைவியாக நடித்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.