அஜித் பட இயக்குநருடன் கைக்கோர்த்த விஜய் பட தயாரிப்பாளர் : மாஸ் ஹீரோவுடன் இணைந்த புது கூட்டணி!!

Author: Udayachandran RadhaKrishnan
15 December 2022, 3:51 pm

இயக்குநர் ஹெச் வினோத் நடிகர் அஜித்தை வைத்து 3 படங்களை இயக்கியுள்ளார். சதுரங்க வேட்டை படம் மூலம் இயக்குனராக அறிமுகமாக வினோத், பின்னர் தீரன் அதிகாரம் ஒன்று படத்தை எடுத்தார்.

இதையடுத்து நேர்கொண்ட பார்வை, வலிமை, சதுரங்க வேட்டை 2, துணிவு ஆகிய படங்களை இயக்கினார். இதில் துணிவு வரும் பொங்கல் அன்று வெளியாகிறது. மேலும் விஜய்யின் வாரிசு படமும் வெளியாகிறது.

அடுத்தடுத்து அஜித்தை வைத்து இயக்கிய வினோத், தற்போது அடுத்த படத்திற்காக மாஸ் ஹீரோவுடன் இணைந்துள்ளார். தனுஷ் நடிக்கும் அடுத்த படத்தை இயக்குநர் H வினோத் இயக்கவுள்ளதாக நம்பத்தகுந்த தகவல்கள் கூறப்பட்டு வருகின்றன.

மேலும் இப்படத்தை பிரபல தயாரிப்பு மற்றும் விநியோகஸ்த நிறுவனமான 7 ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனத்தின் சார்பில் லலித்குமார் தயாரிக்கவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகலாம் என தெரிகிறது.

  • Sai Abhayankar Interview Highlightsவெறும் ரீல்ஸ்காக பாட்டு போடக்கூடாது…அனிருத்தை தாக்கிய சாய் அபயங்கர்..!
  • Views: - 407

    0

    0