இயக்குநர் நெல்சனுக்கு நெருக்கடி கொடுத்த விஜய் : ஒரு படத்துக்காக இப்படியா?!!

Author: Udayachandran RadhaKrishnan
8 February 2023, 12:54 pm

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்த ‘பீஸ்ட்’ 2022ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உலகம் முழுக்க வெளியானது.

பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்திருக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரித்த இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரித்தாக குற்றம்ச்சாட்டும் எழுந்தது. ஒரு பக்கம் படத்தின் விமர்சனங்கள் நெகட்டிவாக இருந்தாலும், வசூலில் சக்கை போடு போட்டது.

இதையடுத்து நடிகர் விஜய் ‘பீஸ்ட்’ படக்குழுவை நேரில் அழைத்து விருந்து வைத்துள்ளார். ஆனால் நெல்சனுக்கோ இந்த படத்தின் விமர்சனத்தால் வெளியில் தலை காட்ட முடியாத நிலை ஏற்பட்டது.

மேலும் பீஸ்ட் படத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ், நெல்சனை வைத்து ரஜினியை இயக்க வாய்ப்பையும் கொடுத்ததால் விஜய் ரசிகர்களை விட ரஜினி ரசிகர்கள் கடும் கோபத்தில் இருந்தனர்.

நாட்கள் நகர நகர, தற்போது நெல்சன், ரஜினியை வைத்து உருவாக்கும் ஜெயிலர் படத்தின் அப்டேட்டுகள் அடுத்தது வெளியாகி வருகின்றன.

இந்த நிலையில் பிரபல தயாரிப்பாளரும், சினிமா பத்திரிகையாளருமான அந்தணன் ஒரு தகவலை வெளியிட்டுள்ளார்.

பீஸ்ட் பட தோல்விக்கு பிறகு விஜய், நெல்சனின் செல்போன் அழைப்பு எடுப்பதேயில்லையாம். அதே போல தர்பார் படத்துக்கு பின் முருகதாஸ்க்கு எந்த நடிகர்களும் வாய்ப்பு கொடுப்பதில்லையாம்.

அதே போலத்தான், நெல்சன் பீஸ்ட் இயக்கும் போது விஜய் நன்றாக பழகினார். ரெண்டு பேரும் ஒரு உயரத்தில் இருந்தால்தான் தொடர்பில் இருப்பார்கள் இல்லையென்றால் அந்த இயக்குநரின் மார்க்கெட் அவ்வளவுதான் என கூறியுள்ளார்.

  • Bigg Boss Anshitha akbarsha Pregnant அன்ஷிதா 3 மாதம் கர்ப்பமா? பிக் பாஸ் வீட்டுக்குள் என்ன நடக்குது?!
  • Views: - 555

    0

    0