வளைகாப்பு நிகழ்ச்சியில் ரூ.400 கோடி பரிசை கொடுத்த விஜய்… இன்ப அதிர்ச்சியில் இயக்குநர் அட்லீ!!

Author: Udayachandran RadhaKrishnan
20 December 2022, 6:02 pm

தந்தையாக உள்ளதால் விஜய் ரூ.400 கோடி பரிசை கொடுத்துள்ளது இயக்குநர் அட்லீக்கு இன்ப அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

ஷங்கரின் உதவியாளரான இயக்குநர் அட்லீ, ராஜா ராணி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். பின்னர் விஜய்யை வைத்து தெறி படத்தை எடுத்தார். படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது.

இதையடுத்து அடுத்தடுத்து விஜய், இயக்குநர் அட்லீயுடன் கூட்டணி போட்டார். தொடர்ந்து வெளியான மெர்சல், பிகில் எல்லாமே மெகா ஹிட் அடித்தது.

இதையடுத்து இயக்குநர் அட்லீ, பாலிவுட்டில் ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கி வருகிறார். இயக்குநர் அட்லீ துணை நடிகையான பிரியாவை திருமணம் செய்தார்.

9 வருடங்களுக்கு பிறகு பிரியா கர்ப்பமாகியுள்ள நிலையில் சமீபத்தில் வளைகாப்பு விழா நடைபெற்றது. இதில் அட்லீயின் ஃபேவரைட் நடிகரான விஜய் பங்கேற்று தம்பதியை வாழ்த்தினார்.

அந்த ஜோடிக்கு அழகிய ஓவியம் ஒன்றை இந்த ஜோடிக்கு பரிசாகவும் தந்தார்.இந்த ஓவிய பரிசுதான் நிறுத்தாமல் ரூ. 400 கோடி பதிப்பிலான மற்றொரு பரிசையும் கொடுத்துள்ளார் விஜய். ஆம், தளபதி 68 படத்தை அட்லீக்கு கொடுத்துள்ளாராம்.

சன் பிக்சர்ஸ் – விஜய் – அட்லீ கூட்டணியில் உருவாகவிருக்கும் இப்படத்தின் பட்ஜெட் சுமார் ரூ. 400 கோடி என்று கூறப்படுகிறது. இப்படத்திற்கான அக்ரீமெண்ட் சமீபத்தில் போடப்பட்டதாகவும் பிரபல பத்திரிகையாளர் ஒரு கூறியுள்ளார்.

  • A man fraud in the name of Sunny Leone சன்னி லியோன் பெயரில் இப்படி ஒரு மோசடியா? அதிர்ந்த அரசு!
  • Views: - 2856

    99

    99