சினிமாவை மட்டுமே நம்பி இருக்க முடியாது.. – தொழிலதிபராக கலக்கும் விஜயின் ரீல் தங்கை..!
Author: Vignesh26 January 2024, 11:40 am
லியோ படத்தை தொடர்ந்து தளபதி 68 படத்தில் விஜய் நடித்து வருகிறார். இப்படத்தை பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கவுள்ளார் . அண்மையில் இப்படத்தின் பூஜை பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் பல நட்சத்திர பிரபலங்கள் நடிக்க உள்ளனர்.
விஜயின் திரைப்பயணத்தில் மிகவும் வெற்றிப்படமாக அமைந்த படமாக கில்லியை சொல்லலாம். தரணி இயக்கத்தில் விஜய், திரிஷா, பிரகாஷ்ராஜ் என பல நட்சத்திர பட்டாளங்களுடன் கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியான இந்த படம் Okkadu என்ற தெலுங்கு படத்தை தழுவி எடுக்கப்பட்டது. அப்படம் அப்போதே 50 கோடி வரை வசூலித்துள்ளது.
படத்தின் கதையை தாண்டி இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்கள் இப்போதும், ரசிகர்களின் ப்ளேலிஸ்டில் உள்ளது என்றே கூறலாம். அந்த வகையில், கில்லி படத்தில் விஜயின் தங்கையாக நடித்து ஜெனிபர் பிரபலமானவர். இவர் புவனா என்ற கதாபாத்திரத்தில் குழந்தைத்தனமான இயல்பான நடிப்பை ஜெனிபர் வெளிப்படுத்தி இருந்தாலர்.
பல்வேறு படங்களில் நடித்து வந்த இவர் சினிமாவில் 30 ஆண்டுகளை நிறைவு செய்து இருக்கிறார். 33 வயதாகும் ஜெனிபர் திருமணம் செய்து கொள்ளாமல் தனது தொழிலில் அதிக ஈடுபாடு காட்டி வருகிறார். இவர் நேச்சர் ஜாய் என்ற பெயரில் ரசாயனம் கலக்காத பொருட்களை தயாரித்து தற்போது விற்பனை செய்து வருகிறார்.