வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் பிரமாண்டமாக உருவான திரைப்படம் தான் இந்த திரைப்படம் தான் கோட். மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கிடையில் உருவாகி சாதனை படைத்த இந்த படம் கடந்த செப்டம்பர் 5- ம் தேதி வெளியானது.
இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இதில் விஜய்யுடன் சினேகா மற்றும் மீனாட்சி சௌத்ரி, பிரசாந்த் , மோகன், பிரபுதேவா, பிரேம்ஜி உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திரங்கள் ஒன்று சேர்ந்து நடித்திருந்தார்கள் . இந்த படத்தில் விஜய் அப்பா மகன் என இரட்டை வேடங்களில் நடித்து அசத்தியிருந்தார்.
இதில் மகன் விஜய் வயதை குறித்து காட்டுவதற்காக டிஎஜிங் தொழில்நுட்பம் எல்லாம் பயன்படுத்தப்பட்டிருந்தது படத்திற்கு மிகப்பெரிய பலமாக பார்க்கப்பட்டது. மேலும் படத்தில் நடிகை திரிஷா ஒரு குத்துப் பாடலுக்கு ஆட்டம் போட்டிருந்தது மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது .
இப்படியாக இந்த திரைப்படத்தின் சிறப்பு அம்சங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில் இந்த திரைப்படம் வெளியாகி கிட்டத்தட்ட ரூ. 450 கோடிக்கு மேல் வசூல் ஈட்டி மாபெரும் சாதனை படைத்திருந்தது. இதன் மூலம் படத்திற்கு கிட்டத்தட்ட ரூ. 100 கோடி ஷேர் கிடைத்திருப்பதாக செய்திகள் வெளியானது.
இது படத்தின் மிகப்பெரிய லாபமாக கருதப்படுகிறது. இதை அடுத்து விஜய் மற்றும் படத்தின் தயாரிப்பாளரான அர்ச்சனா கல்பாத்தி இணைந்து அண்மையில் கேக் வெட்டி இந்த வெற்றியை கொண்டாடிய வீடியோ இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.
இந்நிலையில் இது குறித்து வெங்கட் பிரபுவின் தங்கையான வாசுகி பாஸ்கர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். அது குறித்த பதிவில் அந்த கேக் ஆர்டர் செய்த நேரத்தில் கோட் இயக்குனரான வெங்கட் பிரபு அழைத்து இருந்தால் இது மிகச் சரியாக இருந்திருக்கும்.
இதையும் படியுங்கள்: ஆண்மை இல்லாத கணவர்… அமலா பால் கொடுத்த அதிர்ச்சி – “Level Cross” திரைவிமர்சனம்!
நீங்கள் கொண்டாடும் ரூ. 100 கோடி வெற்றியை வழங்கியதில் அவருக்கு நிறைய பங்களிப்பு இருக்கிறது என நான் நம்புகிறேன். எனவே எங்கள் அணியினரையும் அழைத்து இருந்தால் நாங்கள் சந்தோஷமாக இருந்திருப்போம் என தனது எக்ஸ் தளத்தில் தனது ஆதங்கத்தை பதிவிட்டு இருக்கிறார் வாசுகி பாஸ்கர்.
வாசுகி பாஸ்கர் தமிழ் திரையுலகில் முன்னணி ஆடை வடிவமைப்பாளராக வலம் வந்து கொண்டிருக்கிறார். அவரின் இந்த பதிவை பெரும் சர்ச்சைக்காக பார்க்கப்பட்டது. மேலும் தயாரிப்பு நிறுவனத்திற்கும் இயக்குனர் வெங்கட் பிரபுவுக்கு ஏதேனும் மனக்கசப்பு ஏற்பட்டிருக்கிறதா? என்ற ஒரு கேள்வியும் எழுந்துள்ளது.
Vasuki Bhaskar’s X post claiming, the 100 crore celebration of GOAT happened without the knowledge of the director. pic.twitter.com/tliFvlMeyF
— Kolly Buzz (@KollyBuzz) October 15, 2024