ரஜினியிடம் அப்படி நடந்து கொண்ட விஜய்யின் தந்தை.. : தளபதி அப்பாவை ஒதுக்க இது தான் காரணமாம்..?
Author: Vignesh21 January 2023, 2:34 pm
நடிகர் விஜய்க்கும் அவருடைய தந்தை எஸ்.ஏ.சிக்கும் இடையே சில பிரச்சனை இருப்பதாக சமூக வலைதளங்களின் மூலம், நாம் அறிவோம். சில ஆண்டுகளுக்கு முன் இந்த பிரச்சனை அனைவருக்கும் தெரியவந்தது.
இதனால் தளபதி விஜய்யை சுற்றி பல சர்ச்சைகள் எழுந்தன. எதற்காக விஜய் தனது தாய், தந்தையிடம் இருந்து பிரிந்து வாழ்ந்து வருகிறார் என்றும், விஜய் – எஸ்.ஏ.சி இவர்கள் இருவருக்கும் பிரிவு வர என்ன காரணம் என்றெல்லாம் கேள்விகள் எழுந்தன.
இதனிடையே, இதுகுறித்து அதிர்ச்சியளிக்கும் வகையில் தகவல் ஒன்று வெளி வந்து இருக்கிறது. விஜய்யிடம் ரசிகர்களுக்கு பிடித்த ஒன்று அவருடைய எளிமை தான். ஆனால் சிலருக்கு விஜய்யிடம் பிடிக்காதது அவரின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகரை ஒதுக்குவது தான்.
விஜய் தனது தந்தையை ஒதுக்க காரணம் அவர் பொதுவெளிகளில் நடந்து கொள்வது தான் என சிலர் தெரிவித்துள்ளனர்.
ஆரம்ப காலகட்டத்தில் இருந்து இந்த சண்டை உள்ளதாக ஒரு புதிய தகவல் ஒன்று உலா வருகிறது. எஸ்.ஏ. சந்திரசேகர் பல வெற்றிப்படங்களை கொடுத்தவர்.
இருப்பினும் எஸ்.ஏ. சந்திரசேகர் பொதுவெளிகளில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை பார்த்தால் காலில் விழுந்துவிடுவாராம்.
இந்த செயலை கண்டித்து விஜய் பல முறை தனது தந்தையிடம் சண்டை போட்டுள்ளாராம். இதனால் ஆரம்ப கால கட்டத்திலேயே விஜய் தனது தந்தையை வெறுத்துவிட்டதாக என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.