என்னது வாரிசு இல்லையா.. அப்போ, வளர்ப்பு பிள்ளையா..? திடீரென வெளியான உண்மை… அதிருப்தியில் நடிகர் விஜய்.!!

Author: Vignesh
21 December 2022, 6:00 pm

பிரபல இயக்குநராக வலம் வருபவர் எஸ்ஏ சந்திரசேகர் இவரது ஒரே மகன் விஜய். தமிழ் சினிமாவின் உச்ச நடிகராக உள்ள விஜய்க்கு நாடு முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். நடிகர் விஜய் இன்று தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக மட்டுமின்றி மாஸ் நடிகராகவும் உள்ளார் என்றால் அதற்கு அடித்தளம் போட்டவர் அவரது அப்பாதான்.

அப்பாவின் இயக்கத்தில் நடிகராக அறிமுகமான விஜய் பின்னர் படிப்படியாக உயர்ந்து இன்று இந்த அளவுக்கு தவிர்க்க முடியாத ஒரு நடிகராக வளர்ந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில மாதங்களாகவே நடிகர் விஜய்க்கும் அவரது அப்பாவுக்கும் இடையிலான உறவு சரியாக இல்லை என்றும் இருவருக்கும் இடையே பேச்சு வார்த்தை சரியில்லை என்றும் தகவல் வெளியாகி வருகிறது.

இந்நிலையில், தளபதி விஜய்க்கும் அவருடைய தந்தைக்கும் இடையே சில சலசலப்பு ஏற்பட்டது. ஆனால், தற்போது சுமுகமாகிவிட்டது என்று கூறப்படுகிறது.

தில் ராஜூ தயாரிப்பில் வம்சி இயக்கத்தில் விஜய், ரஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகும் திரைப்படம் வாரிசு.

இப்படத்தில் பிரபு, பிரகாஷ் ராஜ், சங்கீதா, சம்யுக்தா, ஷ்யாம், யோகி பாபு, தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த் என ஒரு பிரபல நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. தமிழ், தெலுங்கு என ஒரே நேரத்தில் இரு மொழிகளில் உருவாகி வரும் நிலையில், இப்படம் மூலம் நேரடியாக டோலிவுட்டிற்கு என்ட்ரி கொடுக்கிறார் விஜய்.

வாரிசு படம் வரும் பொங்கலுக்கு வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் கதை இதுதான் என்று கூறி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

அதன்படி, ‘ கவலையில்லாமல் வாழ்ந்து வரும் இளைஞர் தான் நடிகர் விஜய். ஆனால், திடீரென விஜய்யின் வாழ்க்கையில் அனைத்தும் மாற, அவருடைய வளர்ப்பு தந்தை மரணமடைகிறார்.

vijay - updatenews360.jpg 3

இதனால் அவருடைய கோடிக்கணக்கான தொழிலை ஒரு மகனாக எடுத்து நடத்தி அதில் வரும் எதிர்ப்புகளை எப்படி விஜய் எதிர்கொள்கிறார் ‘ என்பது தான் படத்தின் கதை என்கிறார்கள்.

இதை வைத்து பார்க்கும்பொழுது இப்படத்தில் விஜய் வளர்ப்பு பிள்ளை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்று தெரிகிறது.

  • Nayanthara and Vignesh Shivan பாவம் விக்கி.. நயன்தாராவை திருமணம் செய்துவிட்டு கூஜா தூக்குறார்.. பிரபலம் விளாசல்!
  • Views: - 479

    0

    0