கில்லி படத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா? வாய்ப்பை விடாத விஜய்..!
Author: Vignesh3 May 2024, 10:43 am
விஜயின் திரைப்பயணத்தில் மிகவும் வெற்றிப்படமாக அமைந்த படமாக கில்லியை சொல்லலாம். தரணி இயக்கத்தில் விஜய், திரிஷா, பிரகாஷ்ராஜ் என பல நட்சத்திர பட்டாளங்களுடன் கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியான இந்த படம் Okkadu என்ற தெலுங்கு படத்தை தழுவி எடுக்கப்பட்டது. அப்படம் அப்போதே 50 கோடி வரை வசூலித்துள்ளது. படத்தின் கதையை தாண்டி இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்கள் இப்போதும், ரசிகர்களின் ப்ளேலிஸ்டில் உள்ளது என்றே கூறலாம்.

மேலும் படிக்க: பாட்டுன்னா இப்படி இருக்கணும்… இந்த பாட்டு தான் விஜய்க்கு ரொம்ப பிடிக்குமாம்..!
20 வருடங்களுக்கு முன்பு அதாவது 2004 ஆம் ஆண்டில் வெளியான கில்லி படம் தற்போது ரசிகர்கள் அதிக அளவில் வந்து கில்லி திரைப்படத்தை தியேட்டரை உற்சாகமாக பார்த்துக் கொண்டாடி வருகின்றனர். கடந்த பத்து நாட்களுக்கு மேலாக நடிகர் விஜயின் கில்லி படம் ரீ ரிலீஸ் ஆகி தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கிறது.

மேலும் படிக்க: ஜான்வி கபூரின் பண்ணை வீட்டில் தங்க வேண்டுமா?.. அப்போ, உடனே புக் பண்ணுங்க..!
இப்படம் ரூபாய் 25 கோடிக்கு மேல் வசூல் செய்து ரீ ரிலீசில் புதிய வசூல் சாதனை படைத்துள்ளது. பிளாக் பஸ்டர் திரைப்படமான கில்லியில் முதன் முதலில் நடிக்க இருந்தது தளபதி விஜய் கிடையாதாம். நடிகர் அஜித் தான் இப்படத்தில் முதல் முதலில் நடிக்க இருந்தாராம். ஆனால், சில காரணங்களால் இப்படத்தை அஜித் நிராகரித்து விட்டாராம். இதன் பின்னர் தான் இப்படத்தின் கதை விஜய்க்கு சென்றது என்று கூறப்படுகிறது.