கில்லி படத்தின் முதல் சாய்ஸ் விஜய் இல்லை.. அந்த காரணத்தினால் நடிக்காமல் போன பிரபலம்..!

Author: Vignesh
25 March 2024, 5:54 pm

தமிழில் வெளியான கில்லி திரைப்படம் தெலுங்கில் படு ஹிட் அடித்த ஒக்கடு படத்தின் ரீமேக்காக தமிழில் தரணி இயக்கத்தில் வெளிவந்தது அனைவரும் அறிந்த விஷயம். இப்படத்தில், வேலு என்கிற கதாபாத்திரத்தில் கபடி வீரனாக விஜய் நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக தனலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் திரிஷா நடித்தார்.

gilli

வித்யாசாகர் இசையில் இப்படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களுமே பட்டித் தொட்டி எங்கும் பட்டையை கிளப்பியது. நடிகர் விஜயின் திரை பயணத்தில் ரூபாய் 50 கோடிக்கு மேல் வசூல் அள்ளிய முதல் படம் என்கிற அங்கீகாரத்தை கில்லி திரைப்படம் பெற்றது. இந்த படத்தில் விஜயை தாண்டி வேறு எந்த ஒரு நடிகரையும் நம்மால் தற்போது, நினைத்துக் கூட பார்க்க முடியாது. அந்த அளவிற்கு அந்த படத்தில் விஜய் ரசிகர்கள் மனதில் வேலு கதாபாத்திரம் பதிந்துவிட்டது என்றே சொல்லலாம்.

தரணி முதலில் கில்லி படத்திற்கு விக்ரமை தான் அணுகினாராம். ஆனால், அப்போது விக்ரம் தில், தூள் போன்ற படங்களில் பிசியாக நடித்து வந்துள்ளார். இதனால், கில்லி படத்தில் நடிக்க வைக்க தரணி விக்ரமை முதலில் அணுகிய நிலையில், அதேபோல் நாயகியாக ஜோதிகாவை தான் நடிக்க வைக்க திட்டமிட்டு இருந்தாராம். ஆனால், இருவருமே வேறு படங்களில் பிஸியாக இருந்ததால் இதில் நடிக்க முடியாமல் போனதாம்.

  • getti melam serial actor Passed away தூக்கத்திலேயே உயிர் பிரிந்த நடிகர்.. திரையுலகம் அதிர்ச்சி..!!