நெல்சனுக்கு விஜய் கொடுத்த டார்ச்சர்…. தொல்லை தங்க முடியாமல் பகை தீர்த்த சம்பவம் – இது தான் உண்மை!

Author: Shree
21 August 2023, 10:59 am

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் அண்மையில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் ஜெயிலர். இப்படத்திற்கு முன்னர் நெல்சன் கோலமாவு கோகிலா, பீஸ்ட் , டாக்டர் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியிருந்தார். சூப்பர் ஸ்டார் வைத்து படம் எடுப்பதால் எல்லோரது பார்வையும் நெல்சன் மீதே இருந்தது.

இத்திரைப்படத்தில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். பான் இந்தியா படமாக வெளியாகி இப்படம் மாபெரும் வெற்றி பெற்றுவிட்டது.

ஆனால் நெல்சன் விஜய்யை வைத்து இயக்கிய பீஸ்ட் தோல்வியடைந்ததால் அதை வேண்டுமென்றே செய்ததாக ரஜினி ரசிகர்கள் நெல்சனை திட்டி தீர்த்து பகையாளியாக பார்க்க துவங்கினார்கள். ஆனால் ஜெயிலர் வெற்றிக்கு முழு முழுக்க விஜய் தான் காரணமாம். ஆம், நெல்சன் விஜய்யின் பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பில் இருந்தபோது தான் ரஜினிக்கு கதை சொல்ல நெல்சனை ஊக்குவித்து அனுப்பினராம் விஜய். எனவே அவர்கள் இருவரும் எந்த போட்டி பொறாமையும் இல்லாமல் தான் இருக்கிறார்கள் இதற்கிடையில் ரசிகர்கள் தான் வீண் சண்டை போட்டுக்கொள்கிறார்கள்.

ஆனால் உண்மை என்னவென்று தற்போது தெரியவந்துள்ளது. பீஸ்ட் தோல்விக்கு ரஜினியோ, விஜய்யோ காரணமில்லை என்கிறார்கள். முழு தோல்விக்கும் தயாரிப்பாளர் தான் காரணமாம். அந்த சமயத்தில் கேஜிஎப் திரைப்படம் வெளியானது. எனவே பீஸ்ட் படத்தை வெளியிட வேண்டாம் என இயக்குனர் சொல்லியும் தயாரிப்பு நிறுவனம் தான் வெளியிட்டே ஆகவேண்டும் என நிபந்தனை விதித்ததாம்.

எனவே தனில் நெருக்கடியில் அவசவசரமாக படத்தை முடித்து வெளியிடவேண்டியதாக இருந்ததாம். அதனால் தான் படம் தோல்வி அடைந்ததாக சன் பிச்சர்ஸ் நிறுவனர் கலாநிதி மாறன் கூறியுள்ளார். எனவே பீஸ்ட் படத்தின் தோல்விக்கு விஜய்யோ நெல்சனோ காரணமில்லையாம் கலாநிதி மாறன் தான் காரணமாம். இனிமேலாவது நெல்சனை திட்டுவதை நிறுத்துங்கப்பா விஜய் பேன்ஸ் என கேட்டுக்கொண்டுள்ளனர் நெட்டிசன்ஸ்.

ஆனால், தற்போது பிரபல யூடியூபர் ஒரு தகவல் ஒன்றை கூறியுள்ளார். அதாவது பீஸ்ட் படத்தை முதலில் இயக்கவிருந்தது ஏஆர் முருகதாஸ் தானாம். ஆனால், அந்த சமயத்தில் நெல்சன் டாக்டர் படத்தை இயக்கி மாபெரும் ஹிட் கொடுத்ததால் அவசர அவசரமாக ஏஆர் முருகதாஸை தூக்கிவிட்டு நெல்சனை வைத்து பீஸ்ட் படம் எடுத்தார்கள். அவருக்கு கதை எழுத கால அவகாசமே கொடுக்காமல் ஸ்ட்ரைட்டா ஷூட்டிங் ஆரம்பித்து கொஞ்சம் கொஞ்சம் கதை எழுதி கோர்த்துக்கோ என கூறியதால் தான் நெல்சனால் ஒழுங்காக படமே எடுக்க முடியாமல் எதை எதையோ எடுத்து இது தான் படம் என காட்டினால் யார் பார்ப்பாங்க என கேள்வி எழுப்பியுள்ளார். எனவே தனக்கு நேரம் கொடுக்கமால் டார்ச்சர் செய்ததால் தான் நெல்சன் ஒழுங்காக இயக்க முடியாமல் தோல்வி கொடுத்துவிட்டார் என கூறினார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 537

    0

    0