உதவி பண்ணுங்க அப்பா ப்ளீஸ்.. – கதறிய மகனைப் பார்த்து விஜய் எடுத்த முடிவு..!

Author: Vignesh
1 April 2023, 11:31 am

தமிழ் சினிமாவில் நடிகர் விஜய் முன்னணி நடிகராக வலம் வருபவர். இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

நடிகர் விஜய் நடிப்பில் ‘வாரிசு’ திரைப்படம் கடந்த ஜனவரி மாதம் 11ம் தேதி தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றதுடன், வசூலில் சாதனை படைத்துள்ளது. இதனையடுத்து தற்போது விஜய் ‘லியோ’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

leo-updatenews360

இதனிடையே, நடிகர் விஜய் பலருக்கு உதவிகளை செய்து வருகிறார். அதையெல்லாம் அவர் வெளியில் சொல்வது கிடையாது இது அனைவரும் அறிந்த ஒன்று. இதனிடையே, சேனல் ஒன்றுக்கு பத்திரிக்கையாளர் செய்யார் பாலு, விஜய் குறித்த பல சுவாரஸ்யமான விஷயங்களை கூறியுள்ளார்.

அப்போது பத்திரிக்கையாளர் செய்யார் பாலு பேசுகையில், ஒருநாள் தான் பள்ளியில் அதிக மதிப்பெண் எடுத்த பெண்ணை நேர்க்காணல் செய்வதற்காக சென்றதாகவும்,

அப்பெண் மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர் என்றும், அப்பெண்ணின் குடும்பம் பானை செய்யும் தொழிலை செய்து வருவதாகவும், வீடும் மிகவும் சிறியது எனவும், வீட்டின் வறுமையால் அப்பெண் மேற்படிப்பு படிக்காமல் வீட்டில் வேலை பார்த்த நிலையில், அப்பெண்ணின் இந்த நிலைமையை பார்த்த தான் பத்திரிகையில் செய்தியாக வெளியிட்ட சில நாட்கள் கழித்து தன்னை நடிகர் விஜய் அவர் வீட்டிற்கு அழைத்தார்.

vijay dp
vijay dp

தானும் சென்ற போது, விஜய் தன் செய்தியை காட்டி, தன் மகன் இந்தச் செய்தியை படித்ததாகவும், படித்ததும் கண் கலங்கி அப்பா இந்த பொண்ணுக்கு உதவி செய்யுங்க என்று கூறியதாகவும், தானும் அந்தச் செய்தியைப் படித்தேன் என்றும்,

மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருந்ததாகவும், அப்பொண்ணுக்கு உதவி செய்யணும் என்று நடிகர் விஜய் கூறியதாகவும், இதன் பிறகு, அந்தப் பெண்ணை நேரில் சந்தித்த விஜய், சென்னையில் உள்ள ஒரு பிரபல இஞ்சினியரிங் கல்லூரியில் சேர்த்து படிக்க வைத்துள்ளார் என்று நெகிழ்ச்சியோடு பத்திரிக்கையாளர் செய்யார் பாலு தெரிவித்துள்ளார்.

  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 5447

    89

    5