விஜயின் ‘லியோ’ மலையாள சினிமாவை கெடுத்து விட்டது…பிரபல நடிகர் பகீர்..!
Author: Selvan11 February 2025, 7:20 pm
LEO,KGF படத்தை குறை கூறிய நடிகர் உன்னி முகுந்த்
கே ஜி எப்,லியோ போன்ற படங்கள் பான் இந்திய அளவில் வெளியாகி மலையாள சினிமாவின் மார்க்கெட்டை கெடுத்து விட்டது என நடிகர் உன்னி முகுந்த் பேசி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
இதையும் படியுங்க: பட விழாவில் ரசிகர் சொன்ன அந்த வார்த்தை…ஷாக் ஆன நடிகை அனிகா..!
ஒரு காலத்தில் சினிமாவில் அந்தெந்த மொழிகளில் இருக்கும் நடிகர் நடிகைகளின் படங்கள் வெளியாகி,அங்குள்ள ரசிகர்களை கவரும்,ஆனால் சமீப காலமாக பல படங்கள் பான் இந்திய அளவில் ரிலீஸ் ஆகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
அந்த வகையில் சமீபத்தில் உன்னி முகுந்த் இயக்கி நடித்த மார்கோ திரைப்படம் பான் இந்திய படமாக ரிலீஸ் ஆனது.இப்படம் அதிக வன்முறையுடன் சின்ன பட்ஜெட்டில் கேஜிஎஃப் படத்திற்கு நிகராக வெளிவந்தது,வசூல் ரீதியாகவும் வெற்றியடைந்தது.
இந்த நிலையில் சமீபத்தில் இப்படம் உருவான விதம் குறித்து,உன்னி முகுந்த் பேசியுள்ளார்.அதில் எனக்கு ஆக்ஷன் படம் ரொம்ப பிடிக்கும்,ஆனால் டிஸும் டிஸும் சண்டையில் எனக்கு ஆர்வம் இல்லை,நான் என்னை ஹீரோவாக நிலை நாட்டிக்கொள்ள பல குடும்பப்படங்களில் நடித்தேன்,ஆனால் பெரிதாக நான் வளரவில்லை.
கேஜிஎஃப், லியோ மாதிரியான படங்கள் இங்கு வெளியாகி மலையாள ரசிகர்களின் மார்க்கெட்டை கெடுத்து விட்டது,என்னுடைய மக்களுக்கு ஆக்சன் படங்கள் பிடிக்கும் என்பதை நான் புரிந்து கொண்டேன்,அதனால் தான் மார்கோ படத்தை எடுத்து,அதில் நான் நடித்தேன் என்று உன்னி முகுந்த் கூறியிருப்பார்.