ரசிகருக்கு லெட்டர் போட்ட விஜய்… தளபதியே நெகிழ்ந்துப்போன சம்பவம் என்ன தெரியுமா?

Author: Shree
1 July 2023, 4:52 pm

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக விஜய் தற்போது நடிப்பை தாண்டி அரசியலில் இறங்கி அதற்காக மும்முரமாக உழைத்து வருகிறார். அண்மையில் விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா நடத்தினார்.

இந்த நிகழ்ச்சியில் சுமார் 1500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு நடிகர் விஜய்யே தனது கைகளால் சான்றிதழ் மற்றும் ரூ.5000 ஊக்கத்தொகையையும் வழங்கி, புகைப்படமும் எடுத்துக் கொண்டார். தனி ஒரு ஆளாக அரசாங்கம் செய்த சலுகை போன்று அவர் நடத்திய இந்த விருது விழா அரசியல்வாதிகளையே அசைத்துப்பார்த்தது. இதற்காக விஜய்க்கு பலதரப்பில் இருந்து பாராட்டுக்கள் குவிந்தது.

இந்த விழாவிற்கு பெரும் பங்கு வகித்தவர்கள் விஜய் மக்கள் இயக்கத்தை சார்ந்த நிர்வாகிகள் தான். எனவே தனது பிறந்தநாளில் 4 லட்ச ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த ஈசிஆர் சரவணனுக்கு தனது கையால் கடிதம் எழுதி பாராட்டியுள்ளார்.

அந்த கடிதத்தில், கடந்த ஜூன் 22 அன்று தனது பிறந்தநாளில் நமது மக்கள் இயக்கம் வழியாக தாங்கள் செய்த பல்வேறு நலத்திட்ட உதவிகளை ஊடகம் மற்றும் சமூக வலைத்தளங்கள் மூலம் அறிந்ததாகவும், தங்களது இந்த சிறப்பான செயல்பாடுகளை நினைத்து தான் மகிழ்ச்சி அடைகிறேன் நன்றி என்று நடிகர் விஜய் அந்த கடிதத்தில் தெரிவித்து பாராட்டியுள்ளார். விஜய் கைப்பட எழுதியுள்ள இந்த கடிதம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

  • Nayanthara and Vignesh Shivan பாவம் விக்கி.. நயன்தாராவை திருமணம் செய்துவிட்டு கூஜா தூக்குறார்.. பிரபலம் விளாசல்!
  • Views: - 523

    1

    0