தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் தன் அப்பா எஸ்ஏ சந்திர சேகரின் உதவியுடன் சினிமாவில் நுழைந்தார். ஆரம்பதில் பல கேலி,கிண்டலுக்கு ஆளான விஜய் கொஞ்சம் கொஞ்சமாக தன்னை மெருகேற்றி திறமைகளை வளர்த்துக்கொண்டு தமிழ் சினிமாவில் டாப் நடிகராக இடத்தை பிடித்தார்.
குறிப்பாக இவரது நடிப்பு, கியூட்டான எக்ஸ்பிரஷன்ஸ், டான்ஸ் உள்ளிட்டவை ரசிகர்களை உற்சாகப்படுத்தும். செட்டில் கூட மிகவும் அமைதியாக ஒன்றுமே தெரியாதவர் போல் இருப்பார். ஷாட் ரெடி என்றதும் வேறு விஜய்யை பார்க்க முடியும் என அவருடன் நடித்த நடிகர்கள் கூறியிருக்கிறார்கள்.
விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் கடைசிகட்ட படப்பிடிப்புகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. படம் வருகிற தீபாவளி தினத்தில் வெளியாகவுள்ளது படத்தின் மீதான ரசிகர்கள் எதிர்பார்ப்பு கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது.
இந்நிலையில் அடுத்ததாக விஜய் தளபதி 68 படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தை சூப்பர் குட் ஃபிலிம்ஸ் அல்லது ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. தளபதி 68 படத்தின் இயக்குனராக வெங்கட் பிரபு ஒப்பந்தமாகியிருக்கிறார்.
வெங்கட் பிரபு படம் என்றாலே, காமெடி, Fan moments, மாஸ் சீன்ஸ், பாடல்கள் என அனைத்தும் கலந்த மசாலா திரைப்படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இது வெங்கட் பிரபு படம் என்பதால் இசையமைப்பாளர் நிச்சயம் யுவன் ஷங்கர் ராஜா தான் இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், யுவன் இசையமைக்க போவதில்லை என்பது போல் தகவல் வெளியாகியுள்ளதால், ரசிகர்களும் சற்று அப்செட்டில் இருக்கிறார்கள். விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா அல்லது சாய் பல்லவி ஆகியோரில் ஒருவர் தான் நடிக்க இருப்பதாக தகவல் வந்துள்ளது.
இந்நிலையில் லியோ பட தயாரிப்பாளரின் மகன் திருமணம் இன்று நடந்தது. அதில் கலந்துகொள்ள விஜய் வந்திருந்தார். அதன் புகைப்படங்கள் தற்போது வெளியாகி வைரல் ஆகி இருக்கிறது. விஜய்யின் மீசை தான் தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இருக்கிறது.
ஸ்ட்ரெஸ் பஸ்டர் பெரும்பாலான தமிழ்நாட்டு மக்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக விளங்கும் நிகழ்ச்சிதான் “குக் வித் கோமாளி”. 2019 ஆம் ஆண்டு…
கார்த்திக் சுப்பராஜ்-சூர்யா கூட்டணி கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம்…
திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட மாப்பிள்ளைக்கு வருங்கால மனைவியின் உல்லாச வீடியோ அனுப்பிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம்…
வடிவேலு-சுந்தர் சி கம்பேக் கிட்டத்தட்ட 15 வருடங்கள் இடைவெளிக்குப் பிறகு சுந்தர் சியும் வடிவேலுவும் இணைந்து நடித்து இன்று உலகம்…
கோவை கார்ட்டூர் காவல் துறையினர் இன்று காலை 5 மணி அளவில் காந்திபுரம் பேருந்து நிலையத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.…
எல்லாம் ஸ்பாட்ல வர்ரது பொதுவாக ஒரு திரைப்படத்தில் இடம்பெறும் காட்சியை படமாக்க ஸ்கிரிப்ட் படி செல்வதுதான் வழக்கம். பெரும்பாலும் பல…
This website uses cookies.