தளபதி கொடுக்க சொன்னாரு.. வெள்ள பாதிப்பில் உதவிய விஜய் மக்கள் இயக்கம் குவியும் பாராட்டு..!

Author: Vignesh
6 December 2023, 10:49 am

வங்கக்கடலில் உருவாகிய மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை முழுக்க வெள்ளநீரில் மிதக்கிறது. தொடர் கனமழையால் சாலைகளில் பல அடி உயரத்திற்கு நீர் தேங்கி இருக்கிறது. இதனால் குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இடைவிடாது பெய்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. வரலாறு காணாத அளவிற்கு மழை பெய்ய அரசு தன்னால் முடிந்த அளவிற்கு மக்களுக்கு உதவி கொண்டு இருக்கிறது.

Vijay - Updatenews360

இந்நிலையில், பெரும்பாலான ஆறுகள் நிரம்பி விட்டதால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வீடுகளுக்குள் மழை நீர் புகுந்து மார்பளவு தண்ணீர் இருந்ததால் பலர் முதல் தளத்திலும், மொட்டை மாடியிலும் தஞ்சம் அடைந்துள்ளனர். அவர்களை பேரிடம் மீட்பு குழுவினர் தீயணைப்பு குழுவினர் வீட்டு நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளன.

Vijay - Updatenews360

இந்நிலையில், மழைநீர் இன்னும் வடியாததால் பலர் பசி பட்டினியோடு அத்தியாவசிய பொருட்கள் வாங்க முடியாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருக்கிறார்கள். அவர்களுக்கு விஜய் மக்கள் மன்ற நிர்வாகிகள் மற்றும் தளபதியின் ரசிகர்கள் படகில் வீடு தேடி சென்று உதவி செய்து வருகின்றனர். இந்த இக்கட்டான சூழ்நிலையில், விஜய் ரசிகர்களின் இந்த செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

Vijay - Updatenews360
  • anthanan funny criticize on good bad ugly movie ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்