“குட்டி சுவத்த எட்டி பார்த்தா உசுற கொடுக்க நூறு பேரு” ரசிகர்கள் கூட்டத்தை கண்டு மெர்சலான விஜய்!
Author: Rajesh11 January 2024, 2:38 pm
தமிழ் சினிமாவின் உச்ச நடிகரான விஜய் தளபதி என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுகிறார். இவர் நாளைய தீர்ப்பு படத்தில் நடிகராக அறிமுகமாகி பூவே உனக்காக படத்தின் மூலம் புகழ் பெற்றார். அதன் பின்னர் தொடர்ந்து பல்வேறு வெற்றி படங்களில் நடித்து புகழின் உச்சத்திற்கு சென்று சினிமாவில் அசைக்கமுடியாத இடத்திற்கு சென்றுவிட்டார். இதுவரை 66 படங்களில் நடித்திருக்கிறார்.
விஜய் பிரித்தானியாவில் பிறந்த இலங்கைத் தமிழரான சங்கீதா சொர்ணலிங்கத்தை 1999 ஆண்டு திருமணம் செய்துக்கொண்டார். சங்கீதா விஜய்யின் தீவிர ரசிகை. ரசிகையாக விஜய்யை சந்திக்க வந்த சங்கீதாவை விஜய்யின் அப்பா அம்மாவிற்கு பிடித்துப்போக தங்கள் வீட்டு மருமகளாக்கிக்கொள்ளலாம் என யோசித்து விஜய்யிடம் கூற அவரும் அதற்கு ஓகே சொல்லிவிட்டாராம். இவர்களது திருமணம் இந்து மற்றும் கிறிஸ்துவ முறைப்படி நடைபெற்றது.
பின்னர் இவர்களுக்கு திவ்யா சேஷா, சஞ்சய் என இரண்டு பிள்ளைகள் உள்ளனர். திவ்விய பேட்மிட்டனிலும் சஞ்சய் பிலிம் மேக்கரிலும் ஆர்வம் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் இருவருமே வெளிநாட்டில் படித்து வருகிறார்கள். சங்கீதா பிள்ளைகளுடன் இருந்து வரை பார்த்துக்கொள்கிறார். விஜய் நடிப்பு, அரசியல் என பிசியாக இருந்து வருகிறார். இதனிடையே விஜய் – சங்கீதாவுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் நிலவி வருவதாகவும். அவர்கள் விரைவில் விவாகரத்து செய்யப்போவதாகவும் செய்திகள் வெளியாக பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் அதில் துளி கூட உண்மை இல்லை.
இந்நிலையில் விஜய் தளபதி 68 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் சூட்டிங்கில் விஜய்யை காண அவரின் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கூடியிருந்ததை பார்த்து அவர்களுக்கு கையசைத்து அன்பை வெளிப்படுத்தினார். இதை பார்த்தால் ” “குட்டி சுவத்த எட்டி பார்த்தா உசுற கொடுக்க நூறு பேரு” என்ற விஜய்யின் பாடல் வரிகள் தான் நியாபகத்திற்கு வருகிறது என விஜய்யின் ரசிகர்கள் கருத்து கூறி வருகிறார்கள்.