அப்பா OK தானே.. சண்டையை மறந்து சிகிச்சையில் இருக்கும் SAC யை சந்தித்த விஜய்..!

Author: Vignesh
14 September 2023, 8:43 am

தமிழ் சினிமாவில் இயக்குனர், தயாரிப்பாளர், எழுத்தாளர், நடிகர் என பல முகங்களை கொண்டு விளங்கி வருபவர் எஸ்.ஏ. சந்திரசேகர். கோலிவுட்டில் அவர் ஒரு பச்சை குழந்தை என்னும் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். சட்டம் ஒரு இருட்டறை என்னும் திரைப்படம் தான் இவரை பிரபலம் அடைய வைத்தது. தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் 70திற்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

SAC-Dhanush-Updatenews360-1

மேலும், தனது மகனும் பிரபல நடிகருமான தளபதி விஜய் அவர்களை அறிமுகம் செய்து வைத்ததும் இவர் தான். சந்திரசேகர் அவர்கள் இயக்கிய படங்கள் மூலமாக மக்களுக்கு நிறைய நல்ல கருத்துக்களை எடுத்துக் கூறியிருக்கிறார்.

vijay sac-updatenews360

இந்நிலையில், நடிகர் விஜய் அவரது அப்பா SAC உடன் சண்டை போட்டு சில காலம் பேசாமல் இருந்து வந்ததால் இதற்கு முன் பல பட விழாக்களில் விஜய் அவரது அப்பாவை கண்டு கொள்ளாமல் சென்றது கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. இந்நிலையில், சமீபத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்து கொண்டிருக்கிறார் SAC. இதனிடையே, அமெரிக்காவில் தனது அடுத்த பட வேலைகளில் பிஸியாக இருந்த நடிகர் விஜய் நேற்றுதான் இந்தியா திரும்பினார். இதனிடையே, தற்போது விஜய் நேராக அப்பா SAC யை சந்தித்து நலம் விசாரித்து இருக்கிறார். அப்பா மற்றும் அம்மா இருவருடன் விஜய் இருக்கும் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 322

    0

    0