ஒரு வேலை அப்படி இருக்குமோ.. பிரபல பட இயக்குனரை நேரில் அழைத்து பாராட்டிய விஜய்..!

Author: Vignesh
19 July 2024, 10:25 am

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருக்கக்கூடிய விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை கடந்த ஆண்டு ஆரம்பித்தார். தன்னுடைய கட்சியை ஆரம்பித்ததும், பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்பில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளை ஊக்குவிக்கும் வண்ணம் பரிசுத்தொகைகளை வழங்கி கௌரவித்து வருகிறார். இந்த ஆண்டும் அதேபோல 10 மற்றும் 12ஆம் வகுப்பில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது. திருவான்மியூரில், இருக்கும் ஒரு மண்டபத்தில் இந்நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு வந்த மாணவர்களுக்கு விருது வழங்கினார் விஜய்.

Vijay - Updatenews360

இதற்கிடையில், தற்போது விஜய் இயக்குனர் நித்திலனை அழைத்து பாராட்டி இருக்கிறார். அந்த சந்திப்பு பற்றி இயக்குனர் நெகிழ்ச்சியாக twitter-ல் பதிவிட்டுள்ளார். அறிவூட்டும் வகையில், இருந்த இந்த சந்திப்புக்கு நன்றி உங்களை சந்திக்க கிடைத்த வாய்ப்புக்கு நன்றி. மகாராஜா பற்றி நீங்கள் பேசியதை கேட்டு அசந்து விட்டேன். உங்கள் அன்பும் ஆதரவும் மற்றும் ஊக்கத்திற்கு நான் அதிகம் நன்றியுடன் இருப்பேன் என்று நித்திலன் தெரிவித்துள்ளார்.

  • old madurai set work going on for parasakthi movie பழைய மதுரையை உண்மையில் உருவாக்கி வரும் சிவகார்த்திகேயன் படக்குழு? அடேங்கப்பா!