எனக்கு அஜித்திடம் பிடித்ததே அதுதான்.. விஜய்யின் தாயார் ஷோபா பகிர்ந்த சுவாரசியமான விஷயம்..!
Author: Vignesh12 January 2023, 12:59 pm
தமிழ் சினிமாவில் அஜித் மற்றும் விஜய் முன்னணி நடிகர்களாக வலம் வருகிறார்கள். இவர்கள் நடித்த வாரிசு, துணிவு படம் திரையரங்கில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று திரையரங்கில் மேலும் விஜய் பல படங்களுக்கு பிறகு குடும்ப கதையில் நடிப்பதினால் ரசிகர்கள் இந்த படத்தை குடும்பங்கள் கொண்டாடும் படமாக விழா போல கொண்டாடி வருகின்றனர்.
இந்த நிலையில், சமீபத்தில் விஜய்யுடைய அம்மா ஷோபா கொடுத்திருந்த பேட்டியில் விஜய் குறித்தும் அஜித் குறித்தும் தன்னுடைய கருத்தை தெரிவித்திருந்தார்.
அதில் விஜய்யின் தாய் ஷோபா வாரிசு, துணிவு இரன்டு ட்ரைலர்களையும் பார்த்து விட்டதாகவும் ஒரே நாளில் வாரிசு படத்தையும் துணிவு படத்தையும் பார்க்கலாம் என்று இருப்பதாக கூறினார்.
விஜய் மற்றும் அஜித் இரண்டு குடும்பமும் அவ்வப்போது சந்தித்து கொள்வார்கள் எனவும், சாப்பிடுவதற்கு வருவார்கள், நானும் பார்த்திருக்கிறேன், கேள்வியும் பட்டிருக்கிறேன் எனவும், சொல்லப்போனால் விஜய் மற்றும் அஜித் இருவருக்கும் இடையே எந்த பிரச்சனையும் கிடையாது எனவும், அஜித்துடைய மனைவி ஷாலினி கூட எங்களுடைய குடும்பத்துடன் பழக்கத்தில் தான் இருக்கிறார்.
அஜித் மற்றும் விஜய் இருவரும் என்னுடைய குழந்தைகள் தான் என்று ஷோபா தெரிவித்தார்.
இரண்டு பெரிய படங்கள் வரும் போது இரண்டு படங்களும் வெற்றியடைந்தால் அது சினிமாதுறைக்கும் நல்லது, ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியாக இருக்கும் எனவும், அதோடு நான் இரண்டு பேருடைய ரசிகை என்பதால் எனக்கும் மகிழ்ச்சி என தெரிவித்தார். மேலும் அஜித் அவர்களை எனக்கு மிகவும் பிடிக்கும், அவருடைய குரல், நிறம், ஹேர் ஸ்டைலில், அவர் நடித்த வாலி படம் மிகவும் பிடிக்கும் எனவும், அஜித் மற்றும் ஷாலினி நாங்கள் குடும்ப நண்பர்கள் என தெரிவித்தார்.