எங்களை அவமானப்படுத்திட்டாரு விஜய்? இப்படி தவிக்க விட்டுட்டாரே.. புலம்பிய தாய் ஷோபா!!

Author: Vignesh
28 December 2022, 2:30 pm

பிரபல இயக்குநராக வலம் வருபவர் எஸ்ஏ சந்திரசேகர் இவரது ஒரே மகன் விஜய். தமிழ் சினிமாவின் உச்ச நடிகராக உள்ள விஜய்க்கு நாடு முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். நடிகர் விஜய் இன்று தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக மட்டுமின்றி மாஸ் நடிகராகவும் உள்ளார் என்றால் அதற்கு அடித்தளம் போட்டவர் அவரது அப்பாதான்.

vijay - updatenews360

அப்பாவின் இயக்கத்தில் நடிகராக அறிமுகமான விஜய் பின்னர் படிப்படியாக உயர்ந்து இன்று இந்த அளவுக்கு தவிர்க்க முடியாத ஒரு நடிகராக வளர்ந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில மாதங்களாகவே நடிகர் விஜய்க்கும் அவரது அப்பாவுக்கும் இடையிலான உறவு சரியாக இல்லை என்றும் இருவருக்கும் இடையே பேச்சு வார்த்தை சரியில்லை என்றும் தகவல் வெளியாகி வருகிறது.

இந்நிலையில், ஒரே மகனான விஜய் பெற்றோரின் பிறந்தநாள் விழாவிலும் பங்கேற்கவில்லை, தற்போது சதாபிஷேக விழாவிலும் பங்கேற்கவில்லை என அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு தலைவனாக இருந்து கொண்டு இப்படி பெற்றோரை தவிக்க விடுவது நியாயமில்லை என்றும், ரசிகர்களுக்கு தவறான முன் உதாரணமாக இருக்கக் கூடாது என்றும் சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டு வருந்தனர். என்னதான் கோபம் இருந்தாலும் இதுபோன்ற விசேஷங்களை புறக்கணிப்பது ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

Vijay Movie - Updatenews360

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய். அவர் நடிப்பில் வாரிசு படம் வரும் ஜனவரி 12 ஆம் தேதி தியேட்டரில் ரிலீஸாகவுள்ளது.

மேலும், வாரிசு படத்தின் ஆடியோ லான்ச் சமீபத்தில் நேரு ஸ்டேடியத்தில் பிரம்மாண்ட முறையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு படக்குழு உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர்.

Vijay - Updatenews360

இதில், தளபதி விஜய்யின் தாய் தந்தை எஸ் ஏ சி, ஷோபாவும் கலந்து கொண்டனர். ஏற்கனவே தாய் தந்தையை விஜய் கண்டுக்கொள்ளவில்லை என்ற விமர்சனம் எழுந்து வந்தது. அதேபோல் நிகழ்ச்சியிலும் பெற்றோர்களை துளிக்கூட கண்டுகொள்ளாமல் இருந்ததாகவும் வீடியோ வெளியாகி வைரலானது.

இந்நிலையில் தன் மகன் பற்றிய எதுவும் எங்களுக்கு தெரியாது. தற்போது நடிக்கும் படம் மற்றும் அரசியல் போன்றவற்றை பற்றிக்கூட தெரியாது என்று பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டிக்கொடுத்து கூறியுள்ளார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 542

    0

    0