விஜய்க்கு இப்படி ஒரு ஆசையா.. அந்த மாதிரி கதாபாத்திரத்தில் தான் நடிக்க வேண்டுமாம்..!(வீடியோ)

Author: Vignesh
23 December 2023, 7:22 pm

தமிழ் சினிமாவின் உச்ச நடிகரான விஜய் தளபதி என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுகிறார். இவர் நாளைய தீர்ப்பு படத்தில் நடிகராக அறிமுகமாகி பூவே உனக்காக படத்தின் மூலம் புகழ் பெற்றார். அதன் பின்னர் தொடர்ந்து பல்வேறு வெற்றி படங்களில் நடித்து புகழின் உச்சத்திற்கு சென்று சினிமாவில் அசைக்கமுடியாத இடத்திற்கு சென்றுவிட்டார். இதுவரை 66 படங்களில் நடித்திருக்கிறார்.

விஜய் பிரித்தானியாவில் பிறந்த இலங்கைத் தமிழரான சங்கீதா சொர்ணலிங்கத்தை 1999 ஆண்டு திருமணம் செய்துக்கொண்டார். சங்கீதா விஜய்யின் தீவிர ரசிகை. ரசிகையாக விஜய்யை சந்திக்க வந்த சங்கீதாவை விஜய்யின் அப்பா அம்மாவிற்கு பிடித்துப்போக தங்கள் வீட்டு மருமகளாக்கிக்கொள்ளலாம் என யோசித்து விஜய்யிடம் கூற அவரும் அதற்கு ஓகே சொல்லிவிட்டாராம். இவர்களது திருமணம் இந்து மற்றும் கிறிஸ்துவ முறைப்படி நடைபெற்றது.

பின்னர் இவர்களுக்கு திவ்யா சேஷா, சஞ்சய் என இரண்டு பிள்ளைகள் உள்ளனர். திவ்விய பேட்மிட்டனிலும் சஞ்சய் பிலிம் மேக்கரிலும் ஆர்வம் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் இருவருமே வெளிநாட்டில் படித்து வருகிறார்கள். சங்கீதா பிள்ளைகளுடன் இருந்து வரை பார்த்துக்கொள்கிறார். விஜய் நடிப்பு, அரசியல் என பிசியாக இருந்து வருகிறார்.

thalapathy 68-updatenews360

இந்நிலையில், தற்போது தளபதி 68 படத்தில் விஜய் நடித்து வருகிறார். வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது. இப்படி ஒரு நிலையில், பல ஆண்டுகளுக்கு முன்னர் நடிகர் விஜய் அளித்த பேட்டி ஒன்றில், தனக்கு வில்லன் கலந்த ஹீரோ கதாபாத்திரத்தில் நடிக்க ஆசை என தெரிவித்துள்ளார். தன்னுடைய ஆரம்ப காலகட்டத்தில் அப்படி நடித்ததாகவும், அப்படிப்பட்ட ரோல் தனது தாய் சோபாவிற்கு பிடிக்கவில்லை என்பதால், தான் அதன் பின் அப்படி நடிப்பதை விட்டு விட்டதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், அமைதிப்படை சத்யராஜின் அம்மாவாசை ரோல் பண்ண வேண்டும் என்ற ஆசை தனக்கு இருப்பதாகவும் அந்த பேட்டியில் விஜய் கூறியுள்ளார்.

  • Annamalai vs Cool Suresh Whip Trendஅண்ணாமலையை தொடர்ந்து கூல் சுரேஷ் சாட்டையடி… வைரலாகும் வீடியோ..!
  • Views: - 414

    0

    0