ஜாலியோ ஜிம்கானா….நீலாங்கரை வீட்டு பக்கமே போகாத விஜய் – சேர்க்கை சரியில்ல!

Author: Rajesh
9 January 2024, 4:38 pm

நடிகர் விஜய் லியோ படத்தை முடித்த கையோடு அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘தளபதி 68’ படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தின் வேலைகள் தற்போது மும்முரமாக தயாராகி உள்ளது. இப்படத்தில் நடிகர் விஜய் உடன், நடிகர்கள் பிரசாந்த், பிரபுதேவா, மோகன், ஜெயராம், அஜ்மல், நடிகைகள் மீனாக்‌ஷி சவுத்ரி, சினேகா, லைலா மற்றும் வெங்கட் பிரபுவின் ஆஸ்த்தான நடிகர்களான தம்பி பிரேம்ஜி முதல் ஒட்டுமொத்த வெங்கட்பிரபுவின் கேங்கும் இணைந்துள்ளது.

பல வருடங்களுக்கு பின் விஜய்யின் தளபதி 68 படத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பாளராக இணைந்துள்ளார். இப்படத்தில் நடிக்க விஜய் ரூ. 200 கோடி சம்பளம் வாங்கியுள்ளார். இப்படத்திற்காக விஜய் பீல்டவுட் ஆன நட்சத்திரங்களுக்கு வாய்ப்பு கொடுத்து அவர்களுக்கு மீண்டும் ஒரு வாழ்க்கையை கொடுத்துள்ளார். இந்த படம் சயின்ஸ் பிக்சன் கதையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. பிரபல நடிகர் வில் ஸ்மித் நடிப்பில் 2019 ஆம் ஆண்டு வெளியான ஜெமினி மேன் படத்தின் கதை தழுவல் தான் இது என சமீபத்தில் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கிறது.

இதில் நடிகர் பிரசாந்த், நடிகர் அஜ்மல் அமீர், நடிகை லைலா, நடிகை சினேகா உள்ளிட்ட பிரபலங்களுக்கு தளபதி 68 படத்தின் மூலம் மீண்டும் ஒரு வாழ்க்கை உருவாகவுள்ளது என ரசிகர்கள் கூறி வருகிறார்கள். மேலும் இப்படத்தில் நடிகை ஜனனி ஐயர் விஜய்யின் தங்கையாக நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது.

முதல் கட்ட ஷூட்டிங் சென்னையில் முடிந்து , இரண்டாவது கட்ட ஷூட்டிங் தாய்லாந்து நாட்டில் நடைபெற்றது. தற்ப்போது சென்னை கோவளம் பகுதியில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறதாம். இதற்காக கோவளம் பீச் பகுதியில் இரண்டு பெரிய பங்களாவை வாடகைக்கு எடுத்து அதில் தளபதி 68 பட நட்சத்திரங்கள் ஒன்றுகூடி குதூகலித்து வருகிறார்களாம்.

இதனால் விஜய் தனது வீட்டிற்கு செல்வதே கிடையாதாம்.கோவளம் பகுதியில் இருந்து 20 நிமிடத்தில் விஜய் இருக்கும் நீலாங்கரை வீட்டிற்கு வந்துவிடலாம். ஆனால் விஜய் வீட்டிற்கு போவதே கிடையாதாம். அந்த பங்களாவிலேயே ஜாலியாக பொழுதை கழிக்கிறாராம். தான் உண்டு தன் வேலை உண்டு என இருந்து வந்த விஜய் வெங்கட் பிரபு கேங்கில் சேர்ந்து சேர்க்கை சரி இல்லாமல் சேட்டைகளில் பொழுதை கழித்துக் கொண்டிருக்கிறாராம். சென்னையை தொடர்ந்து அடுத்தகட்ட படப்பிடிப்புகள் ராஜஸ்தான், ஸ்ரீலங்கா, இஸ்தான்புல் பகுதிகளில் நடைபெற இருக்கிறது.

  • Why no action is taken even after filing a complaint against Vijay and Trisha விஜய், திரிஷா மீது புகார் கொடுத்தும் ஏன் ஆக்ஷன் எடுக்கல ? சீறிய பெண் பிரபலம்!