சூப்பர் ஹிட் படத்தை தவறவிட்ட அப்பாஸ்… நடிச்சியிருந்தால் அவரு அட்ரஸே இல்லாமல் போயிருப்பார்..!
Author: Vignesh13 January 2024, 10:37 am
1996-ம் ஆண்டு அப்பாஸ் காதல் தேசம் படத்தில் அறிமுகமானார். தொடர்ந்து பல்வேறு சூப்பர்ஹிட் படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் சாக்லேட் பாயாக வலம் வந்தார்.
தமிழில் கோ படத்தில் கடந்த 2011 ஆம் ஆண்டு சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். கடைசியாக இவர் நடிப்பில் 2016-ம் ஆண்டு பச்சைக்கள்ளம் (மலையாளம்) படம் வெளியானது.
எராம் அலி என்னும் பேஷன் டிசைனரை கடந்த 2001-ம் ஆண்டு அப்பாஸ் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அய்மான் என்னும் மகனும், எமிரா என்னும் மகளும் இருக்கின்றனர். அப்பாஸ் தற்போது குடும்பத்தாருடன் ஆக்லாந்தில் (நியூசிலாந்து) வசிக்கிறார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் நடிகர் அப்பாஸ், தனது கால் முட்டியில் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகவும், அடுத்து அக்டோபர் மாதம் தன்னுடைய முட்டியில் ஏற்பட்ட காயத்திற்காக பிசியோதெரபி சிகிச்சை மேற்கொண்டதாக கூறினார்.

பின்னர் அறுவை சிகிச்சை முடிந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவை வெளியிட்டு இருந்தார். அந்த வீடியோவில் தனது உடல்நிலை & மனநிலை குறித்து பேசியிருந்தார். மேலும் தன்னை நலம் விசாரித்த, விசாரிக்க முயன்று தொடர்பு கொண்ட நண்பர்களுக்கும், தனது மனைவிக்கும் நன்றி தெரிவித்தார்.
இந்நிலையில் நடிகர் அப்பாஸ் பேட்டி ஒன்றில், தனது சினிமா வாழ்க்கை மற்றும் உடல்நலம் குறித்து சில தகவல்களை பகிர்ந்துள்ளார். அதில், காதலுக்கு மரியாதை படத்தில் முதலில் நடிக்க வேண்டியது நீங்கள் தானா? என்ற கேள்விக்கு அப்பாஸ், “காதலுக்கு மரியாதை படத்தில் முதலில் நடிக்க வேண்டி இயக்குனர் பாசில் என்னை அனுகினார்.
அப்போது எனது மேலாளர் கால்சீட் தேதி வழங்கவில்லை. அது எனக்கு தெரியாது. அந்த படம் மிஸ் ஆன பிறகு தான் தெரிந்தது. என்னோட மேனேஜர் இந்த படம் பற்றி எனக்கு சொல்லாமல் வேறு வேறு படங்களில் கால்சீட் தேதி வழங்கி விட்டார்”. என அப்பாஸ் வருத்ததுடன் தெரிவித்தார்.
கால்சீட் தேதி இல்லாத காரணத்தால் அப்பாஸ் அந்த படத்தை நிராகரிக்க பின்னர் விஜய் நடித்து மாபெரும் ஹிட் படமாக்கினார். ஒரு வேலை அப்பாஸ் மட்டும் காதலுக்கு மரியாதை படத்தில் நடித்திருந்தால் அவரது சினிமா கெரியர் இன்னும் உச்சத்திற்கு சென்றிருக்கும். விஜய் ஆள் அட்ரஸே இல்லாமல் போயிருப்பார் என ரசிகர்கள் தெரிவித்து வருகிறார்கள்.