அஜித் கூட செட் ஆகாது.. விஜய் ஓகே.. சினிமா வாழ்க்கையில் AK-வை ஒதுக்கி வரும் பிரபல நடிகைகள்..!

Author: Vignesh
4 May 2023, 10:30 am

தமிழ் சினிமாவில் நடிகர் அஜித் முன்னணி நடிகராக திகழ்ந்து வருகிறார். இவர் துணிவு படத்தினை தொடர்ந்து இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் யார் கதாநாயகியாக நடிப்பார் என்ற கேள்வி தற்போது எழுந்து வருகிறது.

ajith vijay -updatenews360

இனிடையே, நடிகர் அஜித் உடன் நடிக்க பல நடிகைகள் போட்டிப்போடும் நிலையில், டாப் இடத்தில் இருக்கும் ஒருசில நடிகைகள் அஜித்துடன் இதுவரை ஜோடி போடாமல் இருந்து வருகிறார்கள்.

samantha_updatenews360

அந்த வகையில், அதில் முக்கியமானவர் நடிகை சமந்தா. சினிமாவில் அறிமுகமாகி 12 ஆண்டுகளில் இதுவரை சமந்தா விஜய்யுடன் கத்தி, தெறி, மெர்சல் போன்ற படங்களில் ஜோடிப்போட்டு இருந்தார். ஆனால் நடிகர் அஜித்துடன் ஜோடியாக நடிக்க வாய்ப்பும் கிடைக்கவில்லை.

அதேபோல், விஜய்யுடன் சர்கார், பைரவா படங்களில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்தார். ஆனால் அஜித்துடன் நடிக்கும் வாய்ப்பு கூட அவருக்கு கிடைக்கவில்லை.

இவர்களை போல் நடிகை அமலா பால், ஸ்ரேயா சரண், ஆண்ட்ரியா போன்ற முன்னணி நடிகைகள் அஜித்துடன் இன்று வரை நடிக்காமல் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!
  • Close menu