மொத்த டீமுக்காக சண்டை போட்ட விஜய்.. கிரிக்கெட் விளையாடிய வீடியோ வைரல்..!

Author: Vignesh
10 January 2024, 5:09 pm

லியோ படத்தை தொடர்ந்து தளபதி 68 படத்தில் விஜய் நடித்து வருகிறார். இப்படத்தை பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கவுள்ளார் . அண்மையில் இப்படத்தின் பூஜை பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் பல நட்சத்திர பிரபலங்கள் நடிக்க உள்ளனர்.

குறிப்பாக பிரஷாந்த், மோகன், பிரபு தேவா, லைலா, சினேகா, மீனாட்சி சவுத்ரி என பல நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். இதன் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தாய்லாந்தில் நடைபெற உள்ளது.

இந்நிலையில், சென்னை, தாய்லாந்து, ஹைதராபாத் என மாறிமாறி பட பிடிப்புகள் நடந்து வருகிறது. GOAT படம் டைம் ட்ராவல் அடிப்படையில் தான், படத்தின் கதை இருக்கும் என கூறப்படுகிறது. அதை பர்ஸ்ட் லுக் போஸ்டர்களும் உறுதி செய்யும் வகையில் தான் இருந்தது.

இதனிடையே, நடிகர் விஜய் தற்போது படக்குழு உடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடும் பழைய வீடியோ ஒன்று வெளியாகி இருக்கிறது. அதாவது வாரிசு பட ஷுட்டிங்கில் எடுத்த வீடியோ தான் அது. அதில் விஜய் ஒரு பந்து சிக்ஸ் சென்றதாக தனது டீமுக்காக மற்றவர்களுடன் சண்டை போட்டுக் கொண்டு இருக்கிறார். அந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரல் ஆகி வருகிறது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 338

    0

    0