மளமளவென அதிகரித்த விஜய்யின் சொத்து மதிப்பு…. ஒரே வருஷத்தில் இத்தனை கோடியா?
Author: Shree31 May 2023, 9:51 am
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தந்தையின் உதவியுடன் சினிமாவில் அறிமுகமாகி இன்று “தளபதி” என்று ரசிகர்களால் அழைக்கப்படும் முன்னணி நடிகராக சிறந்து விளங்கி வருகிறார்.
விஜய் தனது 10 வயதில் வெற்றி என்ற படத்தில் நடித்து அறிமுகமானார். அதன் பின்னர் 1992ல் நாளைய தீர்ப்பு படத்தில் நடித்து ஹீரோவானார். முதல் படத்தில் நிறைய விமர்சனங்களை எதிர் கொண்டாலும் தொடர்ந்து முயற்சியை கைவிடாமல் நடித்து வருகிறார்.
ஆரம்பத்தில் இவர் தந்தை இயக்கத்தில் நடித்து, அதன் பின்னர் பல முன்னணி இயக்குனர்களின் இயக்கத்தில் நடித்து தனக்கென சினிமாவில் இடம் பிடித்தார். தற்போது இவர், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் லியோ படத்தில் நடித்து வருகிறார்.
சமீபத்திய நாட்களில் அவர் நடித்து வரும் படங்களுக்கு சம்பளத்தை அதிகரித்து கோடி கணக்கில் சொத்து சேர்த்து வருகிறாராம். விஜய்.
இவர் தற்போது நடித்து வரும் லியோ படத்திற்கு ரூ 120 கோடி சம்பளம் வாங்கிய நிலையில் தற்போது அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கப்போகும் அரசியல் சார்ந்த திரைப்படத்திற்கு ரூ. 200 கோடி சம்பளம் வாங்கியுள்ளாராம்.
நடிகர் விஜய்க்கு ஏற்கனவே ரூ 445 கோடி சொத்து இருக்கும் நிலையில் தற்போது படத்திற்கு படம் அதிகம் சம்பளம் வாங்கி அவரின் சொத்து மதிப்பு மேலும் அதிகரித்துவிட்டதாக கூறப்படுகிறது.