ஜெயிலர் பார்த்து நடுங்கிய விஜய்… லியோ Re – ஷூட்டிங் எடுத்து தலையை பிச்சிக்கொள்ளும் லோகேஷ்!
Author: Shree3 October 2023, 1:56 pm
தமிழ் சினிமா திரையுலகில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் நடிகர் இளைய தளபதி விஜய். இவர் நடித்து வெளிவர இருக்கும் திரைப்படம் என்றாலே, அவரது ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமையும். அதில் முதல் விருந்தாக விஜய் நடித்து வெள்ளி திரைக்கு வரவிருக்கும் திரைப்படத்திற்கான ஆடியோ லான்ச் என்றாலே, விஜய் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பும், அரசியல் வட்டாரத்தில் விஜய் பேசும் பஞ்ச் வசனங்களும் பெரும் பிரபலமானவை அப்படியாக பேசப்பட்டு வந்தது.
தற்போது வருகிற அக்டோபர் 19ஆம் தேதி உலகமெங்கும் வெள்ளி திரையில் வரவிருக்கும் லியோ திரைப்படத்திற்கு பாதுகாப்பு நலன் கருதி, ஆடியோ லான்ச் கேன்சல் செய்யப்பட்டதாக லியோ திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்திருந்தது. இந்த அறிவிப்பானது, சினிமா திரைத்துறை மட்டுமில்லாமல், அவரது ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றமாக அமைந்தது. விஜய்க்கு அரசியல் வட்டாரத்தில் இருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டதாகவும் அதனால் அதான் ஆடியோ லான்ச் கேன்சல் செய்துவிட்டதாகவும் பேச்சுக்கள் பேசப்பட்டது.
தொடர்ந்து லியோ சில பல சர்ச்சைகளில் சிக்கி வருகிறது. இதனிடையே சில நாட்களுக்கு முன்னர் பிரபல நடிகர் மீசை ராஜேந்திரன் பேட்டி ஒன்றில், விஜய் ரஜினியின் ஜெயிலர் படத்தை பார்த்து நடுங்கிவிட்டதாகவும் அப்படத்தின் முழு வசூல் விவரம் வெளியானதில் இருந்தே படத்தில் சில பல மாற்றங்களை செய்யச்சொல்லி லோகேஷ் கனகராஜுக்கு அழுத்தம் கொடுத்ததாகவும், அதனால் லியோ திரைப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் ரீ ஷூட் செய்யப்பட்டு வருவதாகவும் மீசை ராஜேந்திரன் அந்த பேட்டியில் கூறியுள்ளார். இதனால் லோகேஷ் வேலைச்சுமையால் தூக்கமமில்லாமல் கஷ்டப்பட்டு வருவதாகவும் அவர் கூறி சர்ச்சை கிளப்பியுள்ளார். இதற்கு விஜய் ரசிகர்கள் மறுப்பு தெரிவித்து அவரை விமர்சித்து வருகின்றனர்.