விஜய் கதவை தட்டிய இயக்குநர்கள் அஜித் வீட்டு வாசலில்.. லிஸ்டில் மாஸ் டைரக்டர்!

Author: Udayachandran RadhaKrishnan
18 October 2024, 4:11 am

விஜய்க்கு எழுதிய கதைகளை அஜித்துக்காக இயக்கும் இயக்குநர்கள்.. கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

நடிகர் விஜய் தீவிர அரசியலில் இறங்க உள்ளதால் கடைசியாக ஒரே ஒரு படத்தில் மட்டும் கமிட் ஆகியுள்ளார்.

ஹெச் வினோத் இயக்கத்தில் உருவாகும் தளபதி 69 படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்துடன் சினிமாவுக்கு முழுக்கு போட உள்ளார். மேலும் தமிழக வெற்றிக் கழகம் என்ற தனது கட்சியின் முதல் மாநாட்டை இந்த மாதமே நடத்த உள்ளார்.

மேலும் படிக்க: ஸ்டைலு ஸ்டைலு தான்.. நீ சூப்பர் ஸ்டெயிலு தான் : அஜித்துக்காக போடப்பட்ட பாட்ஷா ட்யூன்!!

இப்படியிருக்கையில் அவருக்காக கதை எழுதிய இயக்குநர்கள் தற்போது அஜித்தை நோக்கி ஓட்டம் பிடித்துள்ளனர்.

Ajith New Movie

அஜித் துணிவு படத்திற்கு பிறகு, விடாமுயற்சி மற்றும் Good Bad Ugly என இருபடங்களில் நடித்து வருகிறார். முதன்முறையாக புதிய இயக்குநர்களுடன் கைக்கோர்த்துள்ளார்.

இந்த நிலையில் ஏற்கனவே விஸ்வாசம், வீரம், விவேகம், வேதாளம் படங்களை இயக்கிய சிறுத்தை சிவா 5வது முறையாக மீண்டும் கூட்டணி சேரப் போகிறார். ஒரு பேட்டியில் மறைமுகமாக அஜித்துடன் கூட்டணி சேருவது குறித்து பேசியுள்ளார்.

Ajith KGF Director New Movie

இதை தவிர பிரம்மாண்ட இயக்குநரான பிரசாந்த் நீல் அஜித்துடன் இணையப் போகிறார். இவர் கேஜிஎஃப் மற்றும் சலார் படத்தை இயக்கியவர்.

  • Keerthy Suresh new glamorous look கவர்ச்சி உடையில் பிரபல நடிகருடன் குத்தாட்டம்…வைரலாகும் கீர்த்தி சுரேஷ் வீடியோ..!
  • Views: - 428

    4

    0