நடிகபிர் விஜய் நடிப்பில் கடந்த அக்டோபர் 19ம் தேதி வெளியான திரைப்படம் லியோ. சுமார் ரூ. 300 கோடியில் உருவான இத்திரைப்படம் உலகம் முழுவதும் இதுவரை ரூ. 550 கோடிக்கு மேல் வசூல் ஈட்டி சாதனை படைத்துள்ளது. இந்நிலையில் இப்படத்தின் வெற்றிவிழா மிக பிரம்மாண்டமாக நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
இந்த வெற்றி விழாவில் நடிகர் விஜய், த்ரிஷா, மிஷ்கின், அர்ஜுன், கௌதம் மேனன், மன்சூர் அலிகான், மரியம் ஜார்ஜ், ‘பிக் பாஸ்’ ஜனனி, மேத்யூ தாமஸ், மடோனா செபாஸ்டியன் மற்றும் படத்தொகுப்பாளர் பிலோமின் ராஜ், கலை இயக்குநர் சதீஷ் குமார், இயக்குனர் ரத்தினகுமார் , நடிகர் விஜய்யின் தாயார் ஷோபா உள்ளிட்ட பலர் பங்கேற்றுள்ளனர்.
இவ்விழாவில் பேசிய இயக்குனர் ரத்தினகுமார், ” நான் சின்ன வயசில் இருந்தே விஜய்யின் தீவிர ரசிகன். மாஸ்டர் படத்தில் வாத்தி ரெய்டு பாடல் எழுதியபோதே உண்மையிலே நெய்வேலியில் ரைட் வந்துவிட்டார்கள். இப்போ லியோ படத்தின் ” நா ரெடி தான் வரவா” பாடல் வெளியானதும் எவ்வளவு பிரச்சனை கிளம்பிவிட்டார்கள் என்பது உங்களுக்கே தெரியும்.
விஜய் மற்றவர்கள் போன்று இல்லை. அவர் மிகவும் தாழ்மை குணம் கொண்டவர். யாரையும் நிற்கவைத்து பேசவே மாட்டார். உயர்ந்தவர், தாழ்ந்தவர் என எப்போதும் வித்தியாசம் பார்க்கவே மாட்டார். அவருக்கு எல்லோருமே சரிசமம் ஆனவர்கள். எனவே “எவ்வளவு உயரத்தில் பறந்தாலும் பசித்தால் கீழே வந்து தானே ஆக வேண்டும்” என்று ரத்ன குமார் பேசி பரபரப்பை கிளப்பியுள்ளார்.
இதற்கு முன்னதாக ரஜினி சொன்ன, காக்கா மற்றும் பருந்து கதைக்கு பதிலடி கொடுத்து விமர்சிக்கும் வகையில் ரத்தினகுமார் பேசியிருந்தார். ஒரு வளர்ந்து வரும் இயக்குனர் சினிமா துறையின் மிகப்பெரிய ஜாம்பவான் சூப்பர் ஸ்டார் ரஜினியை இப்படி சல்லித்தனமாக வாய்க்கு வந்தபடியெல்லாம் பேசுவதா? என திரைத்துறை சேர்ந்த பலர் அவரை கடுமையாக திட்டி தீர்த்து வருகின்றனர்.
ரத்தினகுமாரின் இந்த புத்தி மழுப்பலான பேச்சுக்கு அதே மேடையில் பரிகாரம் செய்துள்ளார் தளபதி விஜய். ஆம், நடிகர் விஜய் பேசியபோது, ” ஒரே ஒரு புரட்சி தலைவர் தான், ஒரே ஒரு கேப்டன் தான், ஒரே ஒரு உலக நாயகன் தான், அதேபோல ஒரே சூப்பர் ஸ்டார் தான், ஒரே தல தான் என்று கூறி ரத்தினகுமாரின் சல்லித்தனத்திற்கு பதிலடி கொடுத்தார். விஜய் பிழைக்க தெரிந்தவர்பா…. அப்புறம் பொழப்பு நடத்தணும்ல என ரஜினி ரசிகர்கள் கருத்து கூறி வருகின்றனர்.
ரத்தினகுமாரின் இந்த பேச்சை சமூகவலைத்தளங்களில் மிகவும் மோசமாக விமர்சித்து வரும் ரஜினி ரசிகர்கள், அப்போ “ரஜினி சொன்ன காக்கா விஜய் தான்” என்று நீங்களே ஒதுக்கிட்டீங்களா? என ட்ரோல் செய்து தள்ளியுள்ளனர். அதுக்காகவா இத்தனை கோடி செலவு பண்ணி சக்ஸஸ் மீட் நடத்துனீங்க? அட சைக்…. என்றெல்லாம் பங்கமாக கலாய்த்து தள்ளியுள்ளனர்.
கோவை அதிமுகவில் முக்கிய பிரமுகராக கண்டறியப்படுபவர் வடவள்ளி இன்ஜினியர் சந்திரசேகர். இவர் எம்ஜிஆர் இளைஞரணிச் செயலாளர் பொறுப்பில் பதவி வகித்து…
தமிழ்நாட்டில் மாத மாதம் கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என ஆட்சிக்கு வரும் போது 2021ல் திமுக வாக்குறுதியளித்தது. இது…
ரசிகர்களுக்கான படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று வெளியான நிலையில் இத்திரைப்படத்தை…
வடிவேலு மீதான புகார்கள் வடிவேலு மிகப் பெரிய காமெடி நடிகராக வளர்ந்த பிறகு அவர் தனது சக நடிகர்களை மதிக்க…
அஜித் நடிப்பில் இன்று வெளியானது குட் பேட் அக்லி, முதல் காட்சி முடிந்ததும் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். ஆனால்…
அரியலூர் மாவட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு மறுநாள் காவல் நிலையத்திற்கு வர வேண்டுமா என்பதற்காக அங்கு…
This website uses cookies.