ஓ கொரளி வித்தையா? விஜய் ரசிகர்களை வம்பிழுத்த ப்ளூ சட்டை மாறன்! ரவுண்டு கட்டிட்டாங்க…
Author: Prasad26 April 2025, 1:10 pm
விஜய்யின் ரோட் ஷோ
தவெக தலைவர் விஜய் இன்று கோவையில் நடைபெறும் தனது கட்சியின் பூத் கமிட்டி மாநாட்டில் பங்கேற்கிறார். இன்று மாலை 3 மணிக்கு இந்த மாநாடு தொடங்குகிறது. அந்த வகையில் இன்று காலை கோவை விமான நிலையத்தில் விமானத்தில் வந்து இறங்கினார் விஜய்.

கோவை குரும்பப்பாளையத்தில் உள்ள எஸ்.என்.எஸ் கல்லூரியில் இந்த மாநாடு நடைபெறுகிறது. தனி விமானம் மூலம் கோவை வந்திறங்கிய விஜய்யை வரவேற்க தொண்டர்கள் மிகவும் ஆரவாரமாக கூடினர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து ஸ்தம்பித்துப்போனது.
விஜய் வாகனத்திற்கு தாவிய தொண்டர்
இந்த நிலையில் விஜய் கோவையில் தனது கேரவனின் மேல் நின்றபடி ரோட் ஷோ சென்ற நிலையில் அந்த கேரவனை கூடியிருந்த தொண்டர்களில் ஒருவர் தீடிரென கேரவனின் மீது ஏறி விஜய்யை நோக்கி உற்சாக மிகுதியில் கத்த தொடங்கினார். அதன் பின் விஜய்க்கு கைக்கொடுத்துவிட்டு மீண்டும் இறங்கினார்.
இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆன நிலையில் பிரபல விமர்சகரான ப்ளூ சட்டை மாறன் “கோவையில் விஜய்யின் வாகனத்தில் ஏறி கொரளி வித்தை காட்டிய அணில் குஞ்சு. உங்களுக்கு பயந்துதான்டா Y பாதுகாப்பு கேட்டிருக்காரு. இன்னும் என்னவெல்லாம் செய்யப் போறானுங்களோ” என தனது X தளத்தில் கேலி செய்திருந்தார். அந்த பதிவின் கம்மெண்ட் பகுதியில் விஜய் ரசிகர்கள் பலரும் ப்ளூ சட்டை மாறனை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
கோவையில் விஜய்யின் வாகனத்தில் ஏறி கொரளி வித்தை காட்டிய அணில் குஞ்சு.
— Blue Sattai Maran (@tamiltalkies) April 26, 2025
உங்களுக்கு பயந்துதான்டா Y பாதுகாப்பு கேட்ருக்காரு. இன்னும் என்னவெல்லாம் செய்ய போறானுங்களோ..pic.twitter.com/mROcQPo8JS
