சொல்பேச்சு கேட்காத மகன்… வருத்தத்தில் விஜய் – இப்படித்தானே உங்க அப்பாவுக்கும் வலித்திருக்கும்?
Author: Shree27 June 2023, 5:55 pm
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக ஸ்டார் அந்தஸ்தை பிடித்திருக்கும் விஜய் என்ன தான் அப்பாவின் உதவியால் சினிமாவில் நடிகரானாலும் அடித்தளத்தில் இருந்து வந்த, சினிமா பேக்ரவுண்ட் இல்லாமல் வந்த பல நூற்றுக்கணக்கான நடிகர்களை போலவே ஆரம்பத்தில் அவமானப்படுத்தப்பட்டுள்ளார்.
விஜய் தந்தையால் தான் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ச்சி அடைந்து இன்று இந்த உச்சத்தை தொட்டிருக்கிறார். ஆரம்பத்தில் தனது மகனுக்காகவே பல இயக்குனர்களின் வீட்டு வாசலில் எஸ்ஏ சந்திர சேகர் வாய்ப்பு கேட்டு நின்றிருக்கிறாம். ஆனால் இன்று தந்தை மகனுக்கு இடையில் பிரச்சனை ஏற்பட்டு பேச்சுவார்த்தையை இல்லாமல் இருக்கிறார்கள்.
என்னதான் மஸ்தாபம் இருந்தாலும் விஜய் தன் தந்தையை இந்த அளவிற்கு பகைத்துக்கொள்வது நல்லதல்ல என அவரது ரசிகர்களே வருத்தமடைந்து வருகிறார். இப்படியான நேரத்தில் விஜய் ஒரு தந்தையாக தன் மகன் சஞ்சய் தன் பேச்சை கேட்பதில்லை என பிரபலத்திடம் கூறி வருந்தினராம். ஆம் வாரிசு” படத்தில் இணைந்து நடித்த நடிகை அர்ச்சனா உன்னிகிருஷ்ணன் தான் இந்த தகவலை கூறியுள்ளார்.
அதாவது, முதல் நாள் படப்பிடிப்பில் விஜய் எதுவும் பேசவில்லை. அவர் அடுத்த நாள் முதல் சாதாரணமாக பேச தொடங்கினார். அப்போது அவர் தனது மகன் சஞ்சய் பற்றியும் பேசினார். சஞ்சயை நடிகனாக தான் பார்க்க தான் நான் ஆசைபட்டேன். ஆனால் சஞ்சய் டைரக்ஷன் மீது தான் ஆர்வமாக இருக்கிறான் என வருத்தத்துடன் தெரிவித்ததாக நடிகை அர்ச்சனா கூறியுள்ளார். இதை அறிந்த ரசிகர்கள் ஒரு தந்தையாக உங்களுக்கு எப்படி வலிக்கிறது அப்படித்தானே உங்க அப்பாவுக்கும் இருக்கும்? இனிமேலாவது அவரை அன்பாக அரவணைத்துக்கொள்ளுங்கள் என அட்வைஸ் கொடுத்து வருகிறார்கள்.