ஓடாத படத்துக்கு இவ்வளவு அலப்பறையா.. தயாரிப்பாளரை அதல பாதாளத்தில் தள்ளிய விஜய்..!

Author: Vignesh
7 April 2023, 2:30 pm

2013 இல் வெளிவந்த இந்திய தமிழ்த் திரைப்படம் தலைவா ஆகும். ஏ.எல். விஜய் இயக்கத்தில் சந்திர பிரகாஷ் ஜெயின் இப்படத்தை தயாரித்துள்ளார். இப்படத்தில் கதாநாயகனாக நடிகர் விஜய் நடித்துள்ளார். அவருக்கு இணையாக அமலா பாலும் நடித்துள்ளார்.

மேலும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சத்தியராஜும், மலையாள நடிகர் ராஜீவ் பிள்ளையும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசை மற்றும் பின்னணி இசை ஜி.வி.பிரகாஷ் குமார் அமைத்து இருக்கிறார்.

thalaiva-updatenews360

பல பிரச்சைகளுக்கு பின் ரசிகர்கள் கொண்டாடிய இப்படம் சுமார் ரூ.76 கோடி வரை வசூல் செய்துள்ளது. இப்படத்தில் விஷ்வா எனும் கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் விஜய் வாங்கிய சம்பளம் குறித்து தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி ரூ.12 கோடி இப்படத்தில் நடிக்க விஜய் சம்பளமாக வாங்கியுள்ளாராம்.

thalaiva-updatenews360

தயாரிப்பாளர் விஜய்க்கு இவ்வளவு சம்பளம் கொடுத்தும் படம் வெற்றி பெறவில்லை என்ற வருத்தத்தில் இருந்தனர். அதுமட்டுமல்லாமல் படம் ஏகப்பட்ட நஷ்டத்தை சந்திக்கிறது. இதனால் விஜயைவை வைத்து படம் இயக்கிய தயாரிப்பாளர்கள் அதலபாதாளத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.

thalaiva-updatenews360
  • Kudumbasthan Movie Blockbuster Hit பட்டையை கிளப்பும் குடும்பஸ்தன்…அதுக்குள்ள சின்னத்திரையில்.. வெளியான மாஸ் அறிவிப்பு..!!