மகளின் விளையாட்டை ரசிக்கும் விஜய், சங்கீதா ஜோடி.. சமூக வலைத்தளங்களில் பரவிய வீடியோ..!

Author: Vignesh
27 March 2024, 12:59 pm

நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி 2-ம் தேதி, தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். இதையடுத்து, கட்சியின் சின்னம், கொடி உள்ளிட்டவை தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

Vijay - Updatenews360

இதனிடையே, சமீபத்தில் தான் தமிழக வெற்றிக்கழகம் கட்சியில் சேர செயலி ஒன்றை அறிமுகம் செய்திருந்த நிலையில், 3 நாட்களில் 50 லட்சம் உறுப்பினர்கள் அந்த கட்சியில் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியானது. அரசியல் கட்சியின் தலைவராக இருக்கும் விஜய் சமூகத்தில் நடக்கும் ஒவ்வொரு விஷயத்திலும் தொடர்ந்து தனது குரலை எழுப்பி வருகிறார்.

Vijay - Updatenews360

இந்த நிலையில், சமூக வலைதளங்களில் ஒரு க்யூட்டான வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. திருவனந்தபுரத்தில், இருக்கும் ஸ்டேடியத்தில் GOAT படத்தின் கிளைமாக்ஸ் ஷூட்டிங் நடைபெற்று வருகிறது. விஜய் நேற்று முன்தினம் அங்கு தனி விமானத்தில் வந்திருந்த போது, ஏர்போர்ட்டில் பெரிய அளவு ரசிகர் கூட்டம் கூடிவிட்டது. அதன் பின் நேற்று மாலை ஷூட்டிங்கில் தன்னை பார்க்க கூடியிருந்த ரசிகர்களுக்காக பஸ் மீது ஏறி எல்லோருக்கும் கை அசத்து செல்பி எடுத்துக் கொண்டார்.

vijay sangeetha

இந்த நிலையில், விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதாவிற்கு இடையே சில பிரச்சனைகள் இருப்பதாகவும், அதனால் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தது. ஆனால், அது குறித்து எந்த ஒரு உறுதியான செய்தியும் இதுவரை வெளியாகவில்லை. தளபதி விஜய்யின் மகளான தியாவிற்கு பேட்மிட்டன் விளையாட்டில் ஆர்வம் அதிகம். அதற்கான பயிற்சிகளை கூட அவர் மேற்கொண்டு வருகிறார். இந்தநிலையில், பேட்மிட்டன் போட்டியில் தங்களது மகன் விளையாடுவதை விஜய் தனது மனைவி சங்கீதாவுடன் பார்க்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 264

    0

    0