அப்போ மாஸ்டர்.. இப்போ ஸ்டூடண்ட்.. – யங் லுக்கில் ரசிகர்களுடன் விஜய் எடுத்த செல்பி வைரல்..!

Author: Vignesh
11 January 2024, 1:03 pm

லியோ படத்தை தொடர்ந்து தளபதி 68 படத்தில் விஜய் நடித்து வருகிறார். இப்படத்தை பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கவுள்ளார் . அண்மையில் இப்படத்தின் பூஜை பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் பல நட்சத்திர பிரபலங்கள் நடிக்க உள்ளனர்.

குறிப்பாக பிரஷாந்த், மோகன், பிரபு தேவா, லைலா, சினேகா, மீனாட்சி சவுத்ரி என பல நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். இதன் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தாய்லாந்தில் நடைபெற உள்ளது.

இந்நிலையில், சென்னை, தாய்லாந்து, ஹைதராபாத் என மாறிமாறி பட பிடிப்புகள் நடந்து வருகிறது. GOAT படம் டைம் ட்ராவல் அடிப்படையில் தான், படத்தின் கதை இருக்கும் என கூறப்படுகிறது. அதை பர்ஸ்ட் லுக் போஸ்டர்களும் உறுதி செய்யும் வகையில் தான் இருந்தது.

இதனிடையே, இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் படப்பிடிப்பு தளத்தில் ரசிகர்களுடன் நடிகர் விஜய் செல்பி எடுத்துள்ளார். இது தொடர்பான வீடியோ இணையதளத்தில் வெளியாகி உள்ளது. மேலும், விஜய் தனது புது லுக்கில் ரசிகர்கள் உடன் எடுத்துக்கொண்ட செல்பி போட்டோ தற்போது வெளியாகி வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இதேபோன்று செல்பி புகைப்படத்தை எடுத்து அதை தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் நடிகர் விஜய் பகிர்ந்து இருந்தார். தற்போது, அதை போன்று மற்றொரு செல்பி புகைப்படத்தை எடுத்து இருக்கும் நிலையில், பயர், ஹார்ட் எமோஜிக்களுடன் காட்டு தீயாய் பரவி வருவது குறிப்பிடத்தக்கது.

  • Tom Holland and Zendaya gets engaged SPIDER MAN ரீல் ஜோடி ரியல் ஜோடியாகிறது.. முடிவுக்கு வந்த 4 வருட டேட்டிங்!
  • Views: - 328

    0

    0