நல்ல திரைப்படங்களை தேர்ந்தடுத்து நடிப்பதில் வல்லவர் விஜய் சேதுபதி.அவரது 50வது படமான மஹாராஜா அவருக்கு மறக்க முடியாத வெற்றிப்படமாக அமைந்துள்ளது. இந்தப் படத்தை தொடர்ந்து விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்தடுத்து படங்கள் வெளியாக உள்ளது. அதுமட்டுமல்லாமல் மிஷ்கின் இயக்கத்தில் பிசாசு 2 படத்தில் விஜய் சேதுபதி நடித்து முடித்துள்ள நிலையில் மீண்டும் மிஷ்கின் இயக்கத்திலேயே டிரெயின் திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் விஜய் சேதுபதியின் அடுத்த படம் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. இயக்குனர் பாண்டிராஜுடன் அவர் இணையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் நித்யா மேனன் விஜய் சேதுபதியின் ஜோடியாக நடிக்க உள்ளதாக திரை வட்டாரம் சொல்கிறது.இவர்கள் தமிழில் இணைவது முதல் முறை என்றாலும் இந்த ஜோடி ஏற்கனவே மலையாளத்தில்
19 (1) (ஏ) என்ற திரைப்படத்தில் 2022 இல் இணைந்து நடித்திருந்தனர்.
அந்த திரைப்படத்தை இந்து வி.எஸ் இயக்கியிருந்தார். நமது அரசியலமைப்பு சட்டத்தின் 19(1) (a) பிரிவை சொல்வதாக அந்த படம் இருந்தது. பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்தை சொல்வது இச்சட்டம்.
இந்நிலையில் தமிழில் இவர்கள் இருவரும் இணையவுள்ளது மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஷ்மிகா மந்தனா கன்னடத்தைப் புறக்கணிப்பதாக அம்மாநில காங்கிரஸ் எம்எல்ஏ குற்றம் சாட்டியுள்ள நிலையில், இவ்விவகாரம் பூதாகரமாகியுள்ளது. பெங்களூரு: இது தொடர்பாக…
நடிகர் விஜய் முதலில் பத்திரிகையாளர்களைச் சந்திக்கட்டும், அதற்கு பிறகு நீங்கள் அவரிடம் கேள்வி கேளுங்கள் என நடிகர் விஷால் கூறியுள்ளார்.…
'சர்தார் 2' படப்பிடிப்பு நிறுத்தம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு,நடிகர் கார்த்தி தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி…
மொஹ்சின் கானின் சர்ச்சை கருத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொஹ்சின் கான்,இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலியை…
அரையிறுதியில் வருண் ஆடுவாரா சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தற்போது இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில் நாளை துபாயில் ஆஸ்திரேலியாவை…
சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் புகார் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கேரளா சினிமா உலகில் ஹேமா கமிட்டி கொடுத்த அறிக்கை…
This website uses cookies.