தனுஷ் தான் கண்ணுக்கு தெரியுதா? வாய்ப்பு கொடுக்காத வெற்றிமாறனை அசிங்கப்படுத்திய விஜய்சேதுபதி!
Author: Shree10 March 2023, 12:01 pm
தமிழ் சினிமாவின் அடையாளமாக திகழும் இயக்குநர்களில் ஒருவரான வெற்றிமாறன் பல்சர் பைக்கும், அதனோட பின்னப்பட்ட கதையும் வைத்து படமெடுத்து யார் அந்த இயக்குநர் என்ற கேள்வியோடு ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களையும் திரும்பி பார்க்க வைத்தார்.
முதல் படத்தில் தனது வெற்றியை ஆழமாக பதித்த அவர் தொடர்ந்து ஆடுகளம், விசாரணை, வட சென்னை, அசுரன் தொட்டதெல்லாம் வெற்றி என சாதனைகள் குவித்தார். இந்நிலையில் தற்போது அவரின் விடுதலை படத்தில் விஜய் சேதுபதி சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.

இதன் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய விஜய் சேதுபதி மனதில் நீண்ட நாட்களாக இருந்த ஆதங்கத்தை கொட்டி தீர்த்து வெற்றிமாறனை அசிங்கப்படுத்தியுள்ளார். ஆம், வடசென்னை நான் நடிக்க ஆசைப்பட்டேன். ஆனால் எனக்கு வெற்றிமாறன் வாய்ப்பு தரவில்லை. அதனால், அந்த படத்தை நான் இன்றுவரை பார்க்கவே இல்லை என கூறினார்.
வடசென்னை 2 படத்தில் நீங்கள் நடிப்பீர்களா என கேட்டதற்கு, தெரியவில்லை முதல் பாகத்திற்கு எதிர்பார்த்தது போலவே காத்திருக்கிறேன். ஆனால், அவர் என்ன முடிவெடுப்பாரோ? என கூறினார். இதனால் அசிங்கப்பட்ட வெற்றிமாறன் நிச்சயம் கெஸ்ட் ரோலில் ஆவது விஜய் சேதுபதிக்கு வாய்ப்பு கொடுப்பார். மனதில் பட்டத்தை கேட்டாலும் இன்று வரை வடசென்னை படத்தை பார்க்கவே இல்லை என்று வெற்றிமாறனை அசிங்கப்படுத்தியிருக்கக்கூடாது என்கிறார்கள் தனுஷ் ரசிகர்கள்