உங்க பொண்ண அனுமதிப்பீர்களா…”பேட் கேர்ள்” டீசரால் சர்ச்சையில் சிக்கி தவிக்கும் விஜய்சேதுபதி..!

Author: Selvan
30 January 2025, 1:11 pm

பெண் குழந்தை வைத்திருக்கும் நீங்களே இப்படி பண்ணலாமா

வர்ஷா பரத் இயக்கத்தில் உருவாகி வரும் பேட் கேர்ள் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது.வெற்றிமாறன் தயாரிக்கும் இப்படத்தின் டீசரை இயக்குனர் பா.ரஞ்சித் மற்றும் நடிகர் விஜய்சேதுபதி ஆகியோர் வெளியிட்டனர்.

Vijay Sethupathi Bad Girl Movie issue

இப்படத்தின் டீசர் பெண்களை மோசமாக சித்தரிக்கும் விதமாக உருவாகியுள்ளது.இதனால் பல திரைபிரபலங்கள் மற்றும் நெட்டிசன்கள் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.டீசரில் ஒரு குறிப்பிட்ட ஒரு சமூகத்தை சேர்ந்த பெண்ணை ஏன் இப்படி காட்ட பேண்டும் என கேள்வி எழுந்துள்ளது.

இதையும் படியுங்க: 60s ரசிகர்களையே தட்டியெழுப்பிய பராசக்தி.. ஜூலைக்கு கெடு.. உதவுமா குடும்பம்?

மேலும் இப்படி ஒரு படத்தை எடுக்க எப்படி வெற்றிமாறனுக்கு தைரியம் வந்தது.இது ஒரு கலாச்சார சீர்கேடு கண்டிப்பாக இப்படத்தை தடை செய்ய வேண்டும் என பொதுமக்கள் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.மேலும் படத்தை ப்ரொமோட் செய்த விஜய்சேதுபதி மீதும் கண்டனங்கள் எழுந்துள்ளது.உங்களுடைய பெண்ணை பேட் கேர்ள் ஆக இருக்க அனுமதிப்பீர்களா! என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.ஒரு பெண் குழந்தையை வைத்திருக்கும் நீங்கள் இதுபோன்ற படத்தை ஆதரிக்கலாமா என நெட்டிசன்கள் தங்களுடைய ஆதங்கத்தை தெரிவித்து வருகின்றனர்.

இப்படத்தின் டீசர் வெளியானதுக்கே பெரும் சர்ச்சை வெடித்துள்ள நிலையில்,படம் ரிலீஸ் ஆனால் மிகப்பெரிய பூகம்பம் வெடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • Tamannaah Bhatia and Vijay Varma part ways after years of dating காதலரை பிரிந்தார் நடிகை தமன்னா.. இதுக்கும் அவருதான் காரணமா? இன்ஸ்டா பதிவால் பரபர!