விஜய் சேதுபதியை ELIMINATE செய்த பிக் பாஸ்.. இது லிஸ்டுலயே இல்லையே!

Author: Udayachandran RadhaKrishnan
26 November 2024, 5:17 pm

நடிகர் விஜய் சேதுபதி தனது கடின உழைப்பால் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். குணச்சித்திர கதாபாத்திரம், வில்லன், ஹீரோ என எல்லா கதபாத்திரங்களிலும் மிளருகிறார்.

ஒரு பக்கம் படங்களில் பிஸியாக நடித்தாலும், பிக் பாஸ் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பங்கேற்றுள்ளார். கமல்ஹாசன் விலகியதும் விஜய் சேதுபதியை நிகழ்ச்சிக்குழு களமிறக்கியது.

ஆரம்பத்தில் போர் அடித்தாலம், வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டு என்பது போல வார இறுதி நாட்களில் இவரது எபிசோடு காண ஆவல் அதிகரித்துள்ளது.

இதனால் வார இறுதி நாட்களில் நிகழ்ச்சியின் டிஆர்பி கணிசமாக உயர்வடைகிறது.
நிகழ்ச்சியில் விஜய் சேதுபதிக்கு வாரத்திற்கு ₹10 லட்சம் சம்பளமாக வழங்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படியுங்க: போதையில் அத்துமீறிய பிரபல நடிகர் கைது.. காரில் தப்பியவரை விரட்டி பிடித்த போலீஸ்!

முன்னதாக, நிகழ்ச்சியை வழங்கி வந்த கமல்ஹாசனுக் ₹150 கோடி வரை சம்பளமாக வழங்கப்பட்டதாக கூறப்பட்டது.

VJs Eliminate

கமலின் விலகலுக்குப் பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், அவர் அமெரிக்காவில் ஏஐ தொடர்பான படிப்பில் சேர்ந்ததாலேயே நிகழ்ச்சியை தொடர முடியவில்லை என கூறப்படுகிறது.

Vijay Sethupathi Exit Kamal Haasan Joins

இதனிடையே, மக்கள் நீதி மய்யத்தின் மாநில துணைத் தலைவர் கோவை தங்கவேலு, அடுத்த சீசனில் கமல்ஹாசன் மீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இணைய வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தார்.

கடந்த ஏழு சீசன்களாக பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய கமல்ஹாசன் மீண்டும் நிகழ்ச்சியில் இணைய உள்ளதால் விஜய் சேதுபதியின் நிலை என்னவாகும் என்பதே ரசிகர்களின் கேள்வியாக உள்ளது.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ