அந்த விஷயத்திற்காக நயன்தாராவை யூஸ் செய்த விஜய் சேதுபதி.. – வில்லனாக்கிய சூப்பர் ஸ்டார்..!

Author: Vignesh
16 May 2023, 1:30 pm

தமிழ் சினிமா கண்டெடுத்த பொக்கிஷ நடிகரான விஜய் சேதுபதி ஹீரோ, வில்லன், இளைஞர், முதியவர், கவுரவத் தோற்றம், கல்லூரி மாணவர், திருநங்கை உள்ளிட்ட பலவேறு வித்யாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்து வருகிறார்.

இவர் ஆரம்பதில் சற்று சறுக்கினாலும் பின்னர் அவரது திறமை விஜய் சேதுபதியை மிகப்பெரிய உச்சத்தில் அமரவைத்துவிட்டது. தென்மேற்கு பருவக்காற்று படத்தில் நடித்து அறிமுகமான இவர் பீட்சா படத்தின் மூலம் பரீட்சயமானார்.

தொடர்ந்து நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, நானும் ரௌடி தான் , சேதுபதி , தர்மதுரை, விக்ரம் வேதா, செக்கச்சிவந்த வானம் என பல ஹிட் படங்களில் நடித்து ஸ்டார் நடிகராக முத்திரை குத்தப்பட்டார். இதனிடையே இந்தியிலும் நடித்துள்ளார்.

vijay sethupathi aishwarya-updatenews360

இதுவரை எந்த ஒரு நடிகையுடனும் கிசுகிசுக்கப்படாத விஜய் சேதுபதி தற்போது ஐஸ்வர்யா ராஜேஷ் உடன் சேர்த்து வச்சி பேசப்பட்டு வருகிறார். இவர்கள் இருவரும் சேர்ந்து ரம்மி, தர்மதுரை, கா. பெ ரணசிங்கம், பண்ணையாரும் பதமினியும், செக்கச்சிவந்த வானம், இடம் பொருள் ஏவல், சூப்பர் டீலக்ஸ் இப்படி பல படங்களில் சேர்ந்து நடித்தது எல்லாம் அவர்களின் நெருக்கமான ரகசிய உறவால் தான் என கூறப்பட்டு வருகிறது.

தற்போது விஜய் சேதுபதி எப்படி ஷாருக்கான் படத்தில் கமிட்டான தகவல் வெளியாகி இருக்கிறது. கொரானா காலக்கட்டத்திற்கு முன் ஆரம்பிக்கப்பட்ட இந்த படத்தின் படப்பிடிப்பில் பல பிரச்சனைகளுக்கு மத்தியில் கடந்த ஆண்டில் இருந்து தான் படப்பிடிப்பு தீவிரமாக ஆரபிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

vijay sethupathi-updatenews360

இதனிடையே, கதாநாயகிகளின் தேர்வே கடந்த ஆண்டு ஆரம்பத்தில் தான் நடிகை நயன் தாரா ஜோடி என்று உறுதியான சமயத்தில், ஜூன் மாதம் 2022ல் நடைபெற்ற நயன் – விக்கி திருமணத்தில் நடிகர் ஷாருக்கானும் பங்கேற்றபோது, திருமணத்திற்கு அட்லீ மற்றும் விஜய் சேதுபதியும் கலந்து கொண்ட சமயத்தில், ஷாருக்கானிடம் விஜய் சேதுபதி பார்த்த நேரத்தை வீணடிக்காமல் தன் ஆசையை வெளிப்படுத்தி உள்ளார்.

vijay sethupathi-updatenews360

அதாவது, ஷாருக்கான் படத்தில் உங்களுக்கு வில்லனாக நடிக்க ஆசையாக இருக்கிறது ஜி என்று கூறியுள்ளார். உடனே அதற்கு, ஷாருக்கானும் அட்லீயிடம் தனக்கு வில்லனாக்கிவிடலாமா என்று கேட்டு இருக்கிறார். நீங்க சொல்லி மறுபேச்சி ஏது ஜி என்று தெரிவித்து விஜய் சேதுபதியை வில்லனாக நடிக்க கமிட் செய்து இருக்கிறாராம் அட்லீ. மேலும், ஜவான் படம் வரும் செப்டம்பர் மாதம் 7 ஆம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 490

    0

    0