பிரபல நடிகைக்கு அந்தரங்க டார்ச்சர் கொடுத்த விஜய் சேதுபதி?.. உண்மையை வெளியிட்ட பிரபலம்..!
Author: Vignesh20 July 2023, 8:00 pm
தமிழ் சினிமா கண்டெடுத்த பொக்கிஷ நடிகரான விஜய் சேதுபதி ஹீரோ, வில்லன், இளைஞர், முதியவர், கவுரவத் தோற்றம், கல்லூரி மாணவர், திருநங்கை உள்ளிட்ட பலவேறு வித்யாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து ரசிகர்களை மெய்சிலிர்க்க வைப்பார். ஆரம்பதில் விஜய் சேதுபதி சறுக்கினாலும் பின்னர் அவரது திறமை அவரை மிகப்பெரிய உச்சத்தில் அமரவைத்துவிட்டது. தென்மேற்கு பருவக்காற்று படத்தில் நடித்து அறிமுகமான இவர் பீட்சா படத்தின் மூலம் பரீட்சயமானார்.
தொடர்ந்து நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, நானும் ரௌடி தான் , சேதுபதி , தர்மதுரை, விக்ரம் வேதா, செக்கச்சிவந்த வானம் என பல ஹிட் படங்களில் நடித்து ஸ்டார் நடிகராக முத்திரை குத்தப்பட்டார். இதனிடையே இந்தியிலும் நடித்துள்ளார். ஹீரோ கேரக்டர் விட வில்லன் ரோலில் சைலண்டா வெளுத்து வாங்குவார் விஜய் சேதுபதி. இந்நிலையில் தற்போது அட்லீ இயக்கத்தில் நயன்தாரா நடித்து வரும் ஜவான் திரைப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்திருக்கிறார்.
இதனிடையே, விஜய் சேதுபதி கத்ரீனா கைப் நடிப்பில் மேரி கிறிஸ்மஸ் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. தென்னிந்திய பிரபலம் குறித்து சர்ச்சை ஏற்படுத்தி வரும் வகையில் சோசியல் மீடியாவில் பல அதிர்ச்சியூட்டும் தகவல்களை பகிர்ந்து வருபவர் உமர் சந்து. இவர் தற்போது விஜய் சேதுபதியை பற்றி அதிர்ச்சியூட்டும் தகவலை வெளியிட்டுள்ளார்.
அதாவது விஜய் சேதுபதி கேத்ரினா கைப்புக்கு அந்தரங்க டார்ச்சர் கொடுத்தார் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த பதிவுக்கு விஜய் சேதுபதி அப்படி கிடையாது என்றும், தேவை இல்லாமல் இதுபோன்று பொய்யான தகவல்களை பதிவிட வேண்டாம் என்று விஜய் சேதுபதியின் ரசிகர்கள் உமர்சந்துவை திட்டி தீர்த்து வருகின்றனர்.
Breaking news 📰: #KatrinaKaif is not happy about her upcoming film #MerryChristmas. As per Close Crew from movie, South Actor #VijaySethupathi tried sexually harassed her during movie shooting. pic.twitter.com/qqL679NwRZ
— Umair Sandhu (@UmairSandu) July 19, 2023