சீனாவுக்கு செல்லும் விஜய்சேதுபதி….திடிரென்று எடுத்த முடிவு…!
Author: Selvan15 November 2024, 1:41 pm
விஜய்சேதுபதி அசுர வளர்ச்சி
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளர்ந்து வருபவர் விஜய் சேதுபதி.இவர் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி கொண்டிருக்கிறார்.
இவர் சமீபத்தில் நடித்து வெளியான திரைப்படம் மகாராஜா.இப்படத்தை நித்திலன் சாமிநாதன் இயக்கிருப்பார்.இப்படம் திரையரங்கில் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.இதில் மகளுக்கு அப்பாவாக எதார்த்தமான நடிப்பில் அசத்தியிருப்பார்.படம் OTT யில் வெளியாகியும் மக்களிடம் வரவேற்பை பெற்றது.அதிகம் பார்க்கப்பட்ட படங்களில் மகாராஜா 2 கோடிக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்று முதலிடத்தில் உள்ளது.
இந்நிலையில் மகாராஜா திரைப்படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்யப்படுவதாகவும் , நடிகர் அமீர் கான் நடிப்பதாக தகவல்கள் வெளியாகின.
சீனாவில் மகாராஜா
இந்த நிலையில், மகாராஜா திரைப்படத்தை சீன மொழியில் டப்பிங் செய்து சீனாவில் வருகின்ற 29ஆம் தேதி வெளியிடவுள்ளனர். சீனாவில் இப்படத்தை அலிபாபா குழுமம் வெளியிடுவதாக தகவல் வெளியாகியுள்ளது.