அந்த மனசு தான் சார் கடவுள்… காமெடி நடிகரின் மகனுக்கு உதவிய விஜய் சேதுபதி!

Author:
16 August 2024, 1:26 pm

சினிமா பின்பலம் ஏதுமில்லாத குடும்பத்தில் பிறந்து வளர்ந்து தன்னுடைய லட்சியத்தால் தன்னுடைய கனவால் சினிமாவில் ஜொலிக்க வேண்டும் என்ற கனவோடு திரைப்படத்துறைக்கு வந்து இன்று நட்சத்திரம் நடிகராக உயர்ந்திருப்பவர் தான் நடிகர் விஜய் சேதுபதி.

இவர் முதன் முதலில் தென்மேற்கு பருவக்காற்று திரைப்படத்தில் நடித்து ஹீரோவாக அறிமுகமானார். தொடர்ந்து பல அவமானங்களையும் தோல்விகளையும் சந்தித்த விஜய் சேதுபதி தன்னுடைய முயற்சியை மட்டும் விட்டுவிடாமல் தொடர்ந்து முயன்று அடுத்தடுத்த வெற்றி திரைப்படங்களில் நடித்து இன்று நட்சத்திர ஹீரோவாக தமிழ் சினிமாவில் உயர்ந்திருக்கிறார் .

vijay sethupathi - updatenews360

இவரது நடிப்பில் புஷ்பா 2 திரைப்படம் உருவாகி வருகிறது. இதனிடையே விஜய் சேதுபதி சன் டிவியில் மாஸ்டர் செஃப் என்ற நிகழ்ச்சி தொகுத்து வழங்கி வருகிறார். கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் அடுத்ததாக விஜய் சேதுபதி தொகுப்பாளராக உள்ளதாக செய்திகள் வெளியாக இருக்கிறது.

இந்த நிலையில் தற்போது சொல்ல வரும் தகவல் என்னவென்றால். பிரபல காமெடி நடிகரான தெனாலியின் மகனுக்கு விஜய் சேதுபதி மிகப்பெரிய உதவி ஒன்றை கொடுத்திருக்கிறார். அதாவது தெனாலியின் மகன் எம்ஜிஆர் மருத்துவக் கல்லூரியில் பிசியோதெரபி படித்து வருகிறார். இவருக்கு கல்லூரி கட்டணம் செலுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டதை அடுத்து நடிகர் பாவா லக்ஷ்மணன் விஜய் சேதுபதியிடம் நேரில் அழைத்துச் சென்று உதவி செய்யுமாறு கேட்டு இருக்கிறார்கள்.

உடனடியாக விஜய் சேதுபதி நடிகர் தெனாலியின் மகனுக்காக ரூ.76 ஆயிரம் கல்லூரி கட்டணத்தை கட்டி விட்டு பிசியோதெரபி டாக்டராக அவரை வாழ்த்தியுள்ளார். இதையடுத்து விஜய் சேதுபதிக்கு நன்றி தெரிவித்துள்ள காமெடி நடிகர் தெனாலி, என் மகன் கல்வியிலும், வருங்காலத்தில் பொருளாதாரத்திலும் உயரும் வகையில் நடிகர் விஜய் சேதுபதி செய்த உதவியை நானும் எனது மகனும் வாழ்நாள் முழுவதும் மறக்கவே மாட்டோம் என விஜய் சேதுபதிக்கு நன்றி தெரிவித்துள்ளார். விஜய் சேதுபதி இந்த செயல் அனைவரது பாராட்டுகளை பெற்று வருகிறது.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ