தலைக்கனத்தில் ஆடுகிறாரா விஜய் சேதுபதி? மேடையில் பிரபல தொகுப்பாளினியை திட்டிய வீடியோ!

Author: Shree
22 April 2023, 7:12 pm

தமிழ் சினிமா கண்டெடுத்த பொக்கிஷ நடிகரான விஜய் சேதுபதி ஹீரோ, வில்லன், இளைஞர், முதியவர், கவுரவத் தோற்றம், கல்லூரி மாணவர், திருநங்கை உள்ளிட்ட பலவேறு வித்யாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து ரசிகர்களை மெய்சிலிர்க்க வைப்பார்.

ஆரம்பதில் விஜய் சேதுபதி சறுக்கினாலும் பின்னர் அவரது திறமை அவரை மிகப்பெரிய உச்சத்தில் அமரவைத்துவிட்டது. தென்மேற்கு பருவக்காற்று படத்தில் நடித்து அறிமுகமான இவர் பீட்சா படத்தின் மூலம் பரீட்சயமானார்.

தொடர்ந்து நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, நானும் ரௌடி தான் , சேதுபதி , தர்மதுரை, விக்ரம் வேதா, செக்கச்சிவந்த வானம் என பல ஹிட் படங்களில் நடித்து ஸ்டார் நடிகராக முத்திரை குத்தப்பட்டார். இதனிடையே இந்தியிலும் நடித்துள்ளார்.

ஹீரோ கேரக்டர் விட வில்லன் ரோலில் சைலண்டா வெளுத்து வாங்குவார் விஜய் சேதுபதி, அந்தவகையில் சமீபத்திய விருது விழா ஒன்றில் தொகுப்பாளினி, நீங்க ரஜினி சாருடன் வில்லனா நடிச்சிட்டீங்க அடுத்து யாருடன்? என கேட்டு முடிப்பதற்குள், விஜய் சேதுபதி முகத்தில் அடித்தாற்போல், நீங்களாவது திருந்துங்களேன்… தயவு செய்து சொல்றேன் தலயா? தளபதியா? அப்படி வகுப்பு பிரிச்சி வைக்காதீங்க. அவரவர் ரசிகர்கள் அவங்களை ரசிச்சுட்டு போறாங்க விட்ருங்க என அந்த ஆங்கரை மேடையிலே முகம் சுளிக்க வைத்து திட்டிவிட்டார்.

இந்த பேச்சுக்கு அவரது ரசிகர்கள் ஆதரவளித்தாலும் அவங்க என்ன அப்படி கேட்டுட்டாங்க? என்பது பலரது கேள்வியாக உள்ளது. நெட்டிசன்ஸ் ஒருவர், அடுத்து யாருக்கு வில்லனாக நடிக்கப் போகிறீர்கள் என்று கேட்டதில் தப்பு இல்லை… நீங்க நடிகன் தானே?? அடுத்தவர்களுக்கு அறிவுரை சொல்கிறேன் என்கின்ற பெயரில் நீங்களும் யோகி பாபு மாதிரி தலைக்கனமாய் பேசுகிறீர் விஜய் சேதுபதி இது தவறு… ரஜினி பேட்டையில் நீ வில்லன்… கமல் விக்ரம் படத்தில் நீ வில்லன்.. விஜய் மாஸ்டர் படத்தில் நீ வில்லன்… அடுத்து யார் படத்தில் வில்லனா நடிக்கப் போகிறாய் இதில் என்ன தவறு……? என கேள்விகேட்டு விமர்சித்துள்ளார். இது பழைய வீடியோவாக இருந்தாலும் தற்போது கவனம் ஈர்த்துள்ளது.

https://www.youtube.com/shorts/l57sEbuJy1U
  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 795

    13

    9