விக்ரம் பட நடிகரை இயக்க ஆசைப்படும் விஜய்யின் மகன் சஞ்சய்.! உண்மையை உடைத்த எஸ்.ஏ. சந்திரசேகர்..!

Author: Vignesh
4 October 2022, 8:36 pm

விஜய் சேதுபதியை வைத்து தான் முதலில் படம் இயக்க ஆசை என தெரிவித்துள்ளார் நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய்.

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக திகழ்பவர் விஜய். இவர் நடிப்பில் கடைசியாக ‘பீஸ்ட்’ படம் வெளியானது. இந்தப்படத்தின் ரிலீசுக்கு முன்பாகவே தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபல்லி, ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிப்பில்’ தளபதி 66′ படத்தில் விஜய் நடிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியானது. இந்தப்படத்தில் விஜய்யின் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.

‘வாரிசு’ படத்தினை தில் ராஜுவின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இதன் படத்தின் சூட்டிங் சென்னை, ஐதராபாத் உள்ளிட்ட இடங்களில் நடந்து முடிந்த நிலையில் தற்போது எண்ணூரில் நடைபெற்று வருகிறது. இந்தப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விருவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் விஜய்யை வைத்து படம் இயக்குவது குறித்து அவரது மகன் சஞ்சய் கூறியுள்ளது தொடர்பாக பேட்டி ஒன்றில் விஜய்யின் அப்பா எஸ்.ஏ. சந்திரசேகர் பேசியுள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜயின் மகன் சஞ்சய் லண்டனில் மேற்படிப்பு படித்து வருகிறார் படிப்பு முடித்த பிறகு சஞ்சய் இயக்குனராக களம் இறங்க உள்ளதாக விஜய்யின் அப்பாவான எஸ்ஏ சந்திரசேகர் சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.

விஜய்யின் மகன் சஞ்சய் கனடாவில் சினிமா சம்பந்தமான படிப்பை முடித்து இருக்கிறார். இந்நிலையில் தனது பேரன் குறித்து பேட்டி ஒன்றில் பேசிய எஸ்.ஏ. சந்திரசேகர், உனக்கு ஒரு பிரச்சினையும் கிடையாது நீ ஈசியாக இயக்குனராக விடலாம் என சஞ்சயிடம் கூறியுள்ளார். அதாவது விஜய் தற்போது உச்ச நட்சத்திரமாக இருக்கிறார். அதனால் உன்னுடைய அப்பாவை வைத்து நீ படத்தை இயக்கினால் கூட நீ பெரிய இயக்குனர் ஆகிவிடலம் என கூறியுள்ளார்.

ஆனால் அதற்கு சஞ்சய் தான் முதலில் விஜய்சேதுபதியை வைத்து தான் படம் இயக்குவேன் என தெரிவித்துள்ளார். அதற்கு காரணம் தன்னுடைய அப்பாவை வைத்து இயக்கினால் படம் கண்டிப்பாக வெற்றி பெறும். ஆனால் விஜய்யினால் தான் இந்த வெற்றி கிடைத்தது என பெயர் வந்துவிடும் என கூறியுள்ளார்.

அதனால் முதலில் வேறொரு நடிகரை வைத்து படத்தை இயக்கி வெற்றி கண்ட பிறகு தன்னுடைய தந்தையை வைத்து இயக்கும் எண்ணம் சஞ்சய்க்கு உள்ளதாக எஸ்.ஏ. சந்திரசேகர் தெரிவித்துள்ளார். அந்த அளவிற்கு தன்னுடைய திறமை மீது சஞ்சய் நம்பிக்கை வைத்திருப்பதாகவும் கூறியுள்ளார். சஞ்சய் சமீபத்தில் குறும்படங்கள் இயக்கியது குறிப்பிடத்தக்கது.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி