ஏய் ஓரமா போ… நீ பெரிய ஹீரோ ஆகிடுவியா? அவமானப்படுத்திய கேமராமேனை இன்னும் தேடிக்கொண்டிருக்கும் விஜய்சேதுபதி!

Author: Shree
22 June 2023, 10:10 am

தமிழ் சினிமாவில் நடிகர் விஜய்சேதுபதி திறமை மட்டும் இருந்தால் போதும் ஜெயித்து விடலாம் என்பதற்கு தக்க உதாரணமாக இருப்பவர். மக்கள் செல்வன் என ரசிகர்களால் மிகவும் பாசத்தோடு அழைக்கப்படுபவர் நடிகர் விஜய்சேதுபதி. ஹீரோ, வில்லன், குணச்சித்திர நடிகர், கெஸ்ட் ரோல் என பல பரிணாமங்களில் விஜய் சேதுபதி நடித்து ரசிகர்களை கவர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

நடிகர் விஜய்சேதுபதி முதன் முதலில் கமலின் ‘ நம்மவர்’ படத்தின் ஆடிஷனில் கலந்து கொண்டு பார்ப்பதற்கு சின்ன பையனாக இருக்கிறார் என்ற ஒரே காரணத்திற்காக நிராகரிக்கப்பட்டார். ஆனால் அதே கமல் படமான விக்ரமில் அவருக்கு நிகரான வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து தான் யாருனு தெரியுமா? என்று சொல்லாமல் நடிகர் விஜய்சேதுபதி சொல்லி காட்டினார்.

நடிகர் விஜய்சேதுபதி அவர் கெரியரிலேயே முதன் முதலாக விமர்சன ரீதியாக வெற்றிப் பெற்ற படம் ‘தென்மேற்கு பருவக்காற்று’ திரைப்படம் என அனைவரும் அறிந்ததே. இதனிடையே, தென்மேற்கு பரவக்காற்று படத்திற்காக மூன்று தேசிய விருதுகள் கிடைத்தன பெருமைப்படுத்தியது. இந்தப் படத்தின் வெற்றியை தொடர்ந்து பல படங்களில் நடித்து தன்னை ஒரு கலைஞனாக நடிகர் விஜய்சேதுபதி நிரூபித்துக் காட்டியுள்ளார்.

தற்போது பாலிவுட் வரைக்கும் நடிகர் விஜய்சேதுபதி தன்னை பெருமைப் படுத்தி வருகிறார். இவர் இந்த அளவிற்கு வளர ஆரமபத்தில் பல்வேறு அவமானங்களை சந்தித்திருக்கிறார். அப்படித்தான் ஒரு முறை ஷூட்டிங்கில் ஷாட் ரெடி என்றதும் துறுதுறுவென மிகுந்த ஆர்வத்தோடு அங்கிட்டும் இங்கிட்டுமாக நடித்துள்ளார். இதனால் கடுப்பான கேமரா மேன் ஏய், ஓரமா போ…. என்ன இங்க வந்து சீன போட்டுட்டு இருக்குற? இப்படியெல்லாம் பண்ணினா பெரிய ஹீரோ ஆகிடுவியா? என எல்லோர் முன்பும் அசிங்கப்படுத்தினராம். இதனை விஜய் சேதுபதியை பேட்டி ஒன்றில் நான் இன்னும் அந்த கேமராமேனை தேடிக்கொண்டிருக்கிறேன் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

  • first day collection of Ajith's Good Bad Ugly Movie தல சுற்ற வைக்கும் GBU முதல் நாள் வசூல் வேட்டை… எவ்வளவு கலெக்ஷன் தெரியுமா?