அஜித் சார் கூட நடிக்க வாய்ப்பு…விஜய்சேதுபதி இப்படி மிஸ் பண்ணிட்டாரே..எந்த படமா இருக்கும்.?

Author: Selvan
16 February 2025, 7:23 pm

அஜித்-விஜய்சேதுபதி காம்போ எப்படி இருக்கும்

தமிழ் சினிமாவில் தன்னுடைய யதார்த்தமான நடிப்பால் மக்கள் செல்வன் என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர் நடிகர் விஜய்சேதுபதி.

இதையும் படியுங்க: முதல் மனைவி கோமா..பூர்ணிமா மீது காதல்.. பாக்யராஜ் செய்த துரோகம்.!

ஆரம்ப காலத்தில் சினிமா வாய்ப்புக்காக மிகவும் போராடியுள்ளார்,கிடைக்கின்ற சின்ன சின்ன ரோல்களில் நடித்து நாமளும் சினிமாவில் பெரிய நடிகராக ஒரு நாள் வந்துருவோம் என கனவுகளோடு பயணித்த இவர்,தற்போது தென்னிந்திய சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகராக இருந்து வருகிறார்.

Ajith and Vijay Sethupathi Collaboration

ஜவான்,கிறிஸ்துமஸ் போன்ற படங்கள் மூலம் பாலிவுட் ரசிகர்களையும் கவர்ந்துள்ளார்,கடந்த ஆண்டு இவருடைய 50 வது படமாக வெளிவந்த மகாராஜா திரைப்படம் மெகா வெற்றியை பெற்றுத்தந்ததோடு,சீனாவிலும் இப்படம் ரிலீஸ் ஆகி வசூலை குவித்தது,தற்போது இவர் பல ஸ்டார் ஹீரோக்களுக்கு வில்லனாகவும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்து மிரட்டி வருகிறார்.

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு தனியார் கல்லூரிக்கு சிறப்பு விருந்தினராக சென்ற போது நிகழ்ச்சி தொகுப்பாளரான RJ sha அவரிடம்,அஜித்துடன் நீங்க எப்போ படம் பண்ண போறீங்க?அதுக்காக நாங்கள் வெயிட் பண்ணிட்டு இருக்கோம் என கேட்பார்,அதற்கு விஜய்சேதுபதி என்னிடமும் பலர் இந்த கேள்விகளை கேட்டுள்ளனர்,எதாவது ஒரு நல்ல சந்தர்ப்பத்தில் அது நடந்து விடும் என்று நானும் விரும்புகிறேன்,இதற்கு முன்னாடி ஒரு படத்தில் அஜித் சார் கூட நடிக்க வாய்ப்பு கிடைத்தும்,அதில் நடிக்க முடியாமல் போய்விட்டது என சொல்லுவார்,உடனே RJ sha அது எந்த படம்னு கேட்க,எதுக்கு அத சொல்லிக்கிட்டு என தன்னுடைய பாணியில் பதில் அளித்திருப்பார் விஜய்சேதுபதி,இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆனதையடுத்து ரசிகர்கள் பலர் எந்த படமா இருக்கும் என குழம்பி இருக்கின்றனர்.

  • GV Prakash and Saindhavi Divorce ஜிவி பிரகாஷ் உடன் கள்ளக்காதலா? சைந்தவிக்கு ஸ்கெட்ச்? பிரபல நடிகை பகீர்!
  • Leave a Reply