விஜய் சேதுபதியா இது?.. வித்தியாசமான கெட்டப்பில் அடையாளம் தெரியாமல் இப்படி மாறிட்டாரு..!

Author: Vignesh
16 October 2023, 5:00 pm

எந்த கதாபாத்திரத்திலும் நடிக்க தயார் என்று எக்கச்சக்கமான படங்களை நடித்துக்கொண்டிருக்கும் விஜய் சேதுபதிக்கு என்றுமே தமிழ் ரசிகர்களிடம் தனி இடம் உண்டு.

இந்நிலையில், ஹீரோவாக நடித்து வெளிவந்த காத்து வாக்குல ரெண்டு காதல் படம் ஹிட் கொடுத்து இருந்தாலும், வில்லனாக தொடர்ந்து பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து வருகிறார். அடுத்ததாக மகாராஜா, விடுதலை 2 ஆகிய படங்கள் தமிழில் வெளிவர உள்ளது.

vijay sethupathi - updatenews360 g

அதை போல் ஹிந்தியில் மேரி கிறிஸ்துமஸ் என்னும் திரைப்படத்தில் பாலிவுட் நடிகை கேத்தரினா கைஃப் உடன் நடித்துள்ளார். ஒவ்வொரு படத்திற்கும் மெனக்கிட்டு அந்த படத்திற்காக உருவத்தை அல்லது குணாதிசயங்களை மாற்றிக்கொண்டு நடிப்பவர் விஜய் சேதுபதி.

Vijay-Sethupathi-updatenews360.jpeg 2

அதை பல திரைப்படங்களில் பார்த்திருக்கிறோம். அந்த வகையில் மிஸ்கின் இயக்கத்தில் உருவாகி வரும் ஒரு படத்தில் வித்தியாசமான கெட்டப்பில் இருக்கும் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. இதனைபார்த்த ரசிகர்கள் பலரும் எம் ஆர் ராதா போல் இருக்கிறார் என்றும், மேலும் சிலர் ஜெய்சங்கர், நாஞ்சில் சம்பத் போன்று விஜய் சேதுபதி இருப்பதாகவும், கமெண்ட் செய்து வருகின்றனர்.

vijay sethupathi -updatenews360
  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 511

    1

    0